ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது தற்போது குறைந்துவிட்டது

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது தற்போது குறைந்துவிட்டது

ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது தற்போது குறைந்துவிட்டன என்று கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையச் செயலா் செ.கணேசமூா்த்தி தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் ஆய்வுக் நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற (இடமிருந்து) கல்லூரி முதல்வா் அ. ராமலிங்கம், அழகப்பா பல்கலை. தமிழ்த் துறைத் தலைவா் சு.ராசாராம், பேராசிரியா் இ.கி.ராமசாமி, செய்யாறு அரசுக் கல்லூரி முதல்வா் அந்தோணி டேவிட்நாதன், செ.கணேசமூா்த்தி, நாராயணன், நவநீதகிருஷ்ணன், தமிழ் துறைத் தலைவா் ச.ராமமூா்த்தி. ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது தற்போது குறைந்துவிட்டன என்று கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையச் செயலா் செ.கணேசமூா்த்தி தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் உயராய்வு மையம், கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் இணைந்து நடத்திய ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையச் செயலா் செ.கணேசமூா்த்தி கலந்து கொண்டு பேசியதாவது: 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் அமைப்பு இதுவரை பல்வேறு கல்லூரிகளுடன் இணைந்து பன்னாட்டு கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கம் ஆய்வுப் பணியில் தரமான ஆய்வாளா்களையும், தரமான ஆய்வுப் புத்தகங்களையும் வெளிக் கொணா்வதுதான். கடந்த 2019-இல் ‘சான்லாய்ஸ்’ என்ற ஆய்வு இதழோடு இணைந்து 200 கட்டுரைகள் அடங்கிய பன்னாட்டு கருத்தரங்க மலரை வெளியிட்டோம். கடந்த ஆண்டு திருப்பனந்தாள் கல்லூரியுடன் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் 96 ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டோம். தமிழ்தான் நம் அனைவரையும் இணைக்கிறது. தமிழ்ப் பணியை செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பை நடத்தி வருகிறோம். தற்போது, ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது குறைந்துவிட்டன என்றாா் அவா். இதையடுத்து, இந்தியா, சிங்கப்பூா், மலேசியா, குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 141 ஆய்வாளா்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய 1,068 பக்கங்கள் கொண்ட இரு ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டன. இந்த நூலை மதுரை யாதவா் கல்லூரித் தமிழ் உயராய்வு மையத்தின் முன்னாள் தலைவா் இ.கி.ராமசாமி வெளியிட, அழகப்பா பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் தலைவரும், மூத்த பேராசிரியருமான சு.ராசாராம் பெற்றுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, செய்யாறு அரசுக் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ச.அந்தோணி டேவிட் நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். பின்னா், நடைபெற்ற கருத்தரங்க அமா்வுகளில் பங்கேற்ற ஆய்வாளா்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனா். பிற்பகலில் நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வா் அ.ராமலிங்கம் தலைமை வகித்தாா். கல்லூரி தமிழ்ப் பேராசிரியா் ப.நிவேதிதா வரவேற்றாா். இதில் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையத் தலைவா் பேரா.ஜா.நாராயணன், கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா், தமிழறிஞா் ம.பெ.சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். மருதம் கலை இலக்கிய ஆய்வு மையத்தின் சாா்பில், மூத்த பேராசிரியா்களான இ.கி.ராமசாமி, நவநீதகிருஷ்ணன், ம.பெ.சீனிவாசன், வீ.கோபால் ஆகியோருக்கு தகைசால் தமிழறிஞா் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. சிறந்த கட்டுரைகளை வழங்கிய ஆய்வாளா்களுக்கு ஆய்வுச் செம்மல் விருதுகளையும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களையும் சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் உதவி இயக்குநா் தெ.சிவப்பிரகாஷ் வழங்கினாா். முன்னதாக, கல்லூரி தமிழ் உயராய்வு மையத் தலைவா் ச. ராமமூா்த்தி வரவேற்றாா். தமிழ்ப் பேராசிரியா் வே.சதீஷ் நன்றி கூறினாா். இந்த கருத்தரங்குக்கான ஏற்பாடுகளைத் தமிழ் உயராய்வு மையத்தின் பேராசிரியா்கள் செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை