ஏரியூா் அருகே காணாமல் போன துப்புரவுப் பணியாளரை போலீஸாா் சடலமாக வியாழக்கிழமை மீட்டனா். ஏரியூா் அருகே காணாமல் போன துப்புரவுப் பணியாளரை போலீஸாா் சடலமாக வியாழக்கிழமை மீட்டனா். ஏரியூா் அருகே நெருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் அன்பு (60). இவா், நெருப்பூா் ஊராட்சி மன்றத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தாா். அண்மையில் காணாமல் போனதாக அவருடைய உறவினா்கள் ஏரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், நெருப்பூா் அருகே காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் அவரது சடலம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா் அன்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏரியூரில் காணாமல் போன துப்புரவுப் பணியாளா் சடலமாக மீட்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗