'ஏவுகணைபோல்' தரையில் மோதிய விமானம் – ஃபுளோரிடா விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
'ஏவுகணைபோல்' தரையில் மோதிய விமானம் – ஃபுளோரிடா விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், Reuters அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை குடியிருப்புப் பகுதியில் தனியார் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த ஒன்பது பேரும் உயிரிழந்ததாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்குச் சொந்தமான மார்-அ-லாகோ விடுதியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள க்ரெஸ்ட்ஹேவன் பகுதியில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களில், குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. அங்கு கான்கிரீட் துண்டுகள் மற்றும் லியர்ஜெட் 60 ரக விமானத்தின் சிதைவுகளும் சிதறிக் கிடந்தன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், பஹாமாஸ் தீவுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஊடகங்களின் செய்திகள் மற்றும் விமானப் பயணத் தரவுகளின் ஆய்வுகளின்படி, விபத்துக்கு முன்பு அந்த விமானம் நொடிக்கு நூற்றுக்கணக்கான அடி வேகத்தில் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது. விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடனான உரையாடலில், விமானம் நிமிடத்துக்கு 10,000 அடி வேகத்தில் கீழிறங்கிக் கொண்டிருப்பதாக விமானி கூறியதைக் கேட்க முடிகிறது. இந்த ஒலிப்பதிவு குறித்து பிபிசியின் அமெரிக்க கூட்டு ஊடகமான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்பிறகு விமானி அவசரநிலையை அறிவித்தார். "விமானம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகக் கீழிறங்குகிறது. நிமிடத்துக்கு 20,000 அடி வேகத்தில் கீழிறங்கிக் கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூச்சலிட்டதாக சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. "நாங்கள் விழுந்து நொறுங்கப் போகிறோம்... எங்களுக்கு நேரமில்லை" என்றும் விமானி கட்டுப்பாட்டு மையத்திடம் கூறியுள்ளார். End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், Reuters பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு விபத்து நிகழ்ந்த தருணத்தைக் காட்டுவதாகக் கூறப்படும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளி ஒன்றில், கார் டாஷ் கேமராவில் பதிவான காட்சி இடம்பெற்றுள்ளது. குடியிருப்புப் பகுதியிலுள்ள சாலையில் வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும்போது, விமானம் கிட்டத்தட்ட செங்குத்தாகத் தரையை நோக்கிப் பாய்ந்து விழுந்து பெரும் தீப்பிழம்புடன் வெடிப்பதுபோல் அந்தக் காட்சி தெரிகிறது. "அந்தக் காணொளியைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. ஏவுகணை ஒன்று கீழே விழுவதைப் போலவும், அதைத் தொடர்ந்து பெரும் வெடிப்பு ஏற்பட்டு சிதைவுகள் எல்லா இடங்களிலும் சிதறுவதைப் போலவும் இருக்கிறது" என்று விபத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்தார். விமானத்தில் யார் யார் பயணம் செய்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. "தற்போதைய நிலவரப்படி, தரையில் இருந்தவர்களில் யாரும் உயிரிழந்ததாகவோ காயமடைந்ததாகவோ தகவல் இல்லை" என்று டிசாண்டிஸ் கூறினார். இந்த விபத்தை "மிகவும் துயரமான சம்பவம்" என்று அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சீன் டஃபி குறிப்பிட்டார். விபத்து நடந்த இடத்துக்குச் சென்று விசாரணைக்கு உதவுவதற்காக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஒரு குழுவை அனுப்புவதாகவும் அவர் தெரிவித்தார். "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும் அன்புக்குரியவர்களுக்காகவும் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றும் டஃபி கேட்டுக்கொண்டார். பட மூலாதாரம், Getty Images பாம் பீச் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின்படி, ஆறு வழித்தடங்களைக் கொண்ட மிலிட்டரி ட்ரெயில் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. அந்தச் சாலையில் பல வணிக நிறுவனங்களும் உணவகங்களும் உள்ளன. செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிசாண்டிஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகள், அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்து 600 பேர் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். விமானம் விழுந்து நொறுங்கியதில் அப்பகுதியின் உள்கட்டமைப்புக்குக் கணிசமான சேதம் ஏற்பட்டதாகவும், குடிநீர் விநியோகக் குழாய்களும் சேதமடைந்ததாகவும் அவர்கள் கூறினர். அந்தச் சாலை மீண்டும் திறக்கப்படுவதற்கு குறைந்தது 30 நாள்கள் ஆகும் என்றும் தெரிவித்தனர். விபத்து நிகழ்ந்த நேரத்தில் அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றபோதும் அங்கு கனமழை பெய்துகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை டிரம்ப் மார்-அ-லாகோவில் இருந்தார். விபத்து நிகழ்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு முன்பு, அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அவர் புறப்பட்டுச் சென்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை