\"ஐரோப்பாவுடன் போருக்கு ரெடி..\" திடீரென பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்ய அதிபர் புதின்.. என்ன காரணம்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
\"ஐரோப்பாவுடன் போருக்கு ரெடி..\" திடீரென பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்ய அதிபர் புதின்.. என்ன காரணம்?

மாஸ்கோ: ஐரோப்பிய நாடுகளுடன் போர் நடத்த ரஷ்யா ரெடியாக இருப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். ஐரோப்பாவுடன் போர் நடத்த தாங்கள் விரும்பவில்லை என்றும் அதேநேரம் எல்லை மீறினால் தக்க பதிலடி கொடுக்க ரஷ்யா எப்போதும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். புதினின் இந்த பேச்சு ஐரோப்பிய நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர கிட்டத்தட்ட உலகின் அனைத்து முக்கிய தலைவர்களும் முயன்றுவிட்டனர். அமெரிக்க அதிபரான டிரம்ப் கூட புதினை நேரிலேயே சந்தித்து இது தொடர்பாக பேசிவிட்டார். ஆனால், போர் முடிவுக்கு வருவது போல தெரியவில்லை. பேச்சுவார்த்தை இந்த சூழலில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை தான் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே, பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோருடன் புதின் தொலைபேசியில் பேசியிருந்தார். உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர புதினை ஒத்துக்கொள்ள வைக்கவே இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பல முக்கியமான விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்தாலும் கூட புதின் உடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதற்கு சில ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய அதிபர் புதின் சில முக்கிய கருத்துக்களை கூறினார். ஐரோப்பிய நாடுகளுடன் போர் நடத்த ரஷ்யா விரும்பவில்லை என்றாலும் கூட அப்படியொரு போரை நடத்த வேண்டி சூழல் வந்தால் அதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாக புதின் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிக்கு தயாராக இருந்தாலும் எல்லை மீறினால் பதிலடி கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும், "நாங்கள் ஐரோப்பாவுடன் போரை விரும்பவில்லை. அதேநேரம் யாராவது போரை விரும்பினால், அதற்கு தயாராக இருக்கிறோம். மோதல் எல்லை மீறி சென்றால் யாரும் வெற்றி பெற முடியாது. இதை யாரும் மறந்துவிடக் கூடாது. ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இதுவரை அவர்களால் வெல்ல முடியவில்லை" என்றார். பால்டிக் கடலில் கப்பல் போக்குவரத்துக்கு எந்த தடையும் ஏற்படுவதை ரஷ்யா விரும்பவில்லை என்றும் புதின் தெரிவித்தார். அமெரிக்கா- ஈரான் மோதல் தொடங்கியதை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள மோசமான சூழல் பால்டிக் கடலிலும் உருவாக வேண்டுமா என கேள்வி எழுப்பிய அவர், எந்தவொரு சவாலுக்கும் ரஷ்யா பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் உக்ரைனின் டினிப்ரோ பகுதியில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு ரயில்கள் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர். அப்போவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கொடூரமானது என்று உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கண்டித்துள்ளார். பேச்சுவார்த்தை முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வந்தாலும் கூட இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்வது மக்களிடையே அச்சத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை