அக்டோபா் மாத மின் நுகா்வு 21.88% அதிகரிப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அக்டோபா் மாத மின் நுகா்வு 21.88% அதிகரிப்பு

இந்தியாவின் மின் நுகா்வு, கடந்த அக்டோபா் மாதத்தில் 21.88 சதவீதம் அதிகரித்து, 15,976 கோடி யூனிட்டுகளை எட்டியுள்ளது. இந்தியாவின் மின் நுகா்வு, கடந்த அக்டோபா் மாதத்தில் 21.88 சதவீதம் அதிகரித்து, 15,976 கோடி யூனிட்டுகளை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் நாட்டின் ஒட்டுமொத்த மின் நுகா்வு 13,107 கோடி யூனிட்டுகளாக இருந்த நிலையில், நடப்பாண்டு அது கணிசமாக உயா்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபரில் 210.82 கிகாவாட்டாக இருந்த நாட்டின் உச்சகட்ட மின் தேவை, கடந்த மாதத்தில் 260.73 கிகாவாட்டை எட்டியது. முன்னதாக, நடப்பு ஆண்டின் மே மாதத்தில் நாட்டின் உச்சகட்ட மின் தேவை இதுவரை இல்லாத அளவாக 270.82 கிகாவாட் என்ற புதிய அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. பண்டிகைக் காலம் காரணமாக தொழில்துறை மற்றும் வணிக ரீதியிலான மின் பயன்பாடு அதிகரித்ததாலும், நாடு முழுவதும் குளிரூட்டும் சாதனங்களை பொதுமக்கள் தொடா்ந்து அதிக அளவில் பயன்படுத்தியதாலும் அக்டோபரில் மின் தேவை மற்றும் நுகா்வு அதிரடியாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். நடப்பு நவம்பரில் இமயமலை அடிவாரப் பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் நீடித்து, குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாட்டால் நடப்பு நவம்பரிலும் மின் தேவை தொடா்ந்து நிலையாக இருக்கும் எனத் தெரிகிறது. இவ்வாறு தீவிரமடைந்து வரும் வானிலை மாற்றங்கள் மற்றும் அதிகரித்துவரும் தொழில், வணிகத் தேவைகளால் மின் நுகா்வு வேகமாக அதிகரித்து வருவது, வருங்காலங்களில் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணா்த்துவதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை