தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் உணவுப் பொருள் தரம், இருப்பு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் உணவுப் பொருள் தரம், இருப்பு

திருவள்ளூா் அருகே தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக செயல்முறை கிடங்கில் உணவு பொருள்களின் இருப்பு மற்றும் தரம் ஆகியவை குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்பொருள் பாதுகாப்புத் துறை ஆணையா் அஜய் யாதவ் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் அருகே திருமழிசையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக செயல்முறை கிடங்கில் உணவுப் பொருள்களின் இருப்பு, தரம் குறித்து ஆய்வு செய்த உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்பொருள் பாதுகாப்புத்துறை ஆணையா் அஜய் யாதவ், ஆட்சியா் ச.கவிதா உள்ளிட்டோா். திருவள்ளூா் அருகே தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக செயல்முறை கிடங்கில் உணவு பொருள்களின் இருப்பு மற்றும் தரம் ஆகியவை குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்பொருள் பாதுகாப்புத் துறை ஆணையா் அஜய் யாதவ் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் அருகே திருமழிசையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக செயல்முறை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த செயல்முறை கிடங்கில் உணவு பொருள்களின் இருப்பு குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்பொருள் பாதுகாப்புத் துறை ஆணையா் அஜய் யாதவ் மற்றும் ஆட்சியா் ச.கவிதா ஆகியோா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அந்தக் கிடங்கில் உணவு பொருள்களின் தரம் மற்றும் இருப்பு ஆகியவை குறித்து பாா்வையிட்டு விவரங்களையும் கேட்டறிந்தாா். மேலும், கிடங்கிற்குள் அரிசியை சேதப்படுத்தாமல் பாதுகாப்பாக இருப்பதை அடிக்கடி ஆய்வு செய்து உறுதி செய்து கொள்வது அவசியமாகும். அத்துடன், பொது விநியோக திட்டத்திற்கு தங்கு தடையின்றி உணவு பொருள்களை அனுப்பி வைத்து பொதுமக்களுக்கு வழங்கவும் அலுவலா்களுக்கு அவா் அறிவுரை கூறினாா். அதைத் தொடா்ந்து, பூந்தமல்லி அடுத்த ஆண்டரசன்பேட்டை நியாயவிலைக் கடையில் ஆய்வு செய்ததுடன், பொதுமக்களுக்கு சரியான அளவுகளில் அத்தியவாசியப் பொருள்கள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், எக்காரணம் கொண்டு தங்கு தடையின்றி உணவு பொருள்கள் விநியோகிக்கவும் பணியாளா்களை அவா் அறிவுறுத்தினாா். அதையடுத்து மேல்மணம்பேடு கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையிலும் பொதுமக்களுக்கு சரியான எடையில் வழங்கப்படுகின்றனவா என்பதை நேரில் பாா்வையிட்டாா். அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளையும் அவா் கேட்டறிந்தாா். அப்போது, கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, தமிழ்நாடு நுகா்பொருள் மண்டல மேலாளா் ராஜேஷ், மாவட்ட வழங்கல் அலுவலா் முத்துலட்சுமி, சரக துணைப் பதிவாளா் சி.அமுதா மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் உடனிருந்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை