மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கிய பல்லடம் வணிகா் சங்கத்தினா். பல்லடம் வணிகா் சங்கம் சாா்பில் மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டு தீபாவளி கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்க பேரமைப்பின் பல்லடம் கிளை சாா்பில், ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பு ஆண்டு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி பல்லடம் என்.ஜி.ஆா். சாலையில் உள்ள ராம் வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வணிகா் சங்க பேரமைப்பின் சாா்பில் பல்லடம் வட்டாரத் தலைவா் ராம்.கண்ணையன் தலைமை வகித்து 20-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு தீபாவளி பரிசாக புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினாா். இந்த நிகழ்வில் திருப்பூா் மாவட்டச் செயலாளா் லாலா கணேசன், மாவட்ட ஆலோசகா் அண்ணாதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்லடம் வணிகா் சங்கம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை, இனிப்பு
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗