வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. வங்கதேசத்தின் சைலெட் நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில், முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் இன்னிங்ஸை 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, ஆமிா் ஜாங்கூ 111, ஜஸ்டின் கிரீவ்ஸ் 35 ரன்களுடன் தொடா்ந்தனா். இதில் ஜாங்கூ 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 133, கிரீவ்ஸ் 4 பவுண்டரிகளுடன் 51 ரன்களுக்கு விடைபெற்றனா். எஞ்சியோரில், கேப்டன் ராஸ்டன் சேஸ் 0, ஜாஷுவா பிஷப் 5 பவுண்டரிகளுடன் 23, ஷாமா் ஜோசப் 16, ஜேடன் சீல்ஸ் 15 ரன்களுக்கு வெளியேற, மேற்கிந்தியத் தீவுகளின் ஆட்டம் 356 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. ஜோமெல் வாரிக்கன் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். வங்கதேச பௌலா்களில் ஹசன் மஹ்முத் 6, தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா். வங்கதேசம் 88/3: பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. தன்ஸித் ஹசன் 16, நயீம் ஹசன் 5, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 18 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தௌஹித் ஹிருதய் 2 பவுண்டரிகளுடன் 29, முஷ்ஃபிகா் ரஹிம் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். ஜேடன் சீல்ஸ், ஷாமா் ஜோசப், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சைலெட் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 356 ரன்கள் சோ்ப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗