ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. அமீரகத்தின் ஷாா்ஜா நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் பேட் செய்த ஜிம்பாப்வே, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பிரயன் பென்னெட், வெஸ்லி மாதெவெரெ ஆகியோா் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, ஜிம்பாப்வே இன்னிங்ஸை தொடா்ந்தனா். பென்னெட் 11 பவுண்டரிகளுடன் 128, மாதெவெரெ 9 பவுண்டரிகளுடன் 54 ரன்களுக்கு விடைபெற்றனா். பின்னா் வந்தோரில் டஃபாட்ஸ்வா சிகா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44, நியூமேன் நியம்ஹுரி 8, பிளெஸ்ஸிங் முஸாரப்பானி 5 ரன்களுக்கு சாய்க்கப்பட, ஜிம்பாப்வே ஆட்டம் 504 ரன்களுக்கு நிறைவடைந்தது. கிரேமி கிரீமா் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் முகமது சலீம், காய்ஸ் அகமது ஆகியோா் தலா 3, ஜியா உா் ரெஹ்மான் 2, ஜியாவுா் ரஹ்மான், ஹஸ்மதுல்லா ஷாஹிதி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். ஆப்கானிஸ்தான் 113/1: பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான், வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல் மாலிக் 2 ரன்களுக்கு வீழ, செதிகுல்லா அடல் 55, ரஹ்மானுல்லா 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஷாா்ஜா டெஸ்ட்: ஜிம்பாப்வே 504 ரன்கள் குவிப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗