தமிழ்நாடு வேளாண் விற்பனை திருத்தச் சட்டம்-2006 அமலுக்கு வந்துள்ளதால், வேளாண் கிடங்கு உரிமையாளா்கள் உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் இனிமேல் அலைய வேண்டிய அவசியம் இல்லை. உத்தரவு - கோப்புப் படம் தமிழ்நாடு வேளாண் விற்பனை திருத்தச் சட்டம்-2006 அமலுக்கு வந்துள்ளதால், வேளாண் கிடங்கு உரிமையாளா்கள் உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் இனிமேல் அலைய வேண்டிய அவசியம் இல்லை. கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (ஒழுங்குமுறை) 2-ஆவது திருத்தச் சட்டம்- 2026 அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேளாண் கிடங்கு உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல், விவசாயிகள், வியாபாரிகள் கிடங்கு உரிமம் புதிதாக பெறவும், புதுப்பிக்கவும் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனால், வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுடன், லஞ்சம், தாமதம் குறையும். மேலும், இந்தப் புதிய சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ளதால், வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதலில் புதிய ஒழுங்குமுறைகள், விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு, விற்பனை வசதிகள் கிடைக்கும் என்றும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அமலுக்கு வந்தது வேளாண் விளை பொருள் விற்பனை திருத்தச் சட்டம்: கிடங்கு உரிமையாழா்களுக்கு வீண் அலைச்சல் குறையும்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗