அமெரிக்க இடைக்கால தேர்தல்! இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அமெரிக்க இடைக்கால தேர்தல்! இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி!

அமெரிக்க இடைக்கால தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாவதில் நீடிக்கும் இழுபறி பற்றி... வாக்கு எண்ணிக்கை - AP அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகின்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவிக்காலத்தின் மத்தியில், அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் (கீழவை) உள்ள 435 இடங்களுக்கும், செனட்டில் (மேலவை) உள்ள 35 இடங்களுக்கும், 36 மாகாண ஆளுநா் பதவிகளுக்கும், சில உள்ளாட்சி நிா்வாக அதிகாரிகள் இடங்களுக்கும் இடைக்காலத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் செவ்வாய்க்கிழமை இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அதிபா் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. பிரதிநிதிகள் அவையில் (மொத்தம் 435) பெரும்பான்மை பெற 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயக கட்சி 242 இடங்களிலும், டிரம்ப்பின் குடியரசு கட்சி 151 இடங்களிலும் வெற்றி பெற்றன (இந்திய நேரப்படி நவ. 5 காலை 10 மணி நிலவரம்). இதன்மூலம் பிரதிநிதிகள் அவையானது ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. செனட் அவைக்கு தோ்தல் நடைபெற்ற 35 இடங்களில் 20 இடங்களில் ஜனநாயக கட்சியும், 13-இல் குடியரசு கட்சியும் வெற்றி பெற்றன. செனட் அவையில் பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயக கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது. குடியரசு கட்சிக்கு 44 எம்.பி.க்களே உள்ளனா். இதன்மூலம் நாடாளுமன்ற இரு அவைகளும் ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. இந்த நிலையில், பிரதிநிதிகள் அவையில் மீதமுள்ள 42 இடங்களுக்கும், செனட் அவையில் 2 இடங்களுக்கும் இன்னும் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி 24 மணிநேரத்தைக் கடந்தும் முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகின்றது. இந்த இடங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஓரிரு நாள்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை