அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் எப்போது? - இறுதிக் கணிப்புகளும், வாக்காளர்கள் மனநிலையும்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் எப்போது? - இறுதிக் கணிப்புகளும், வாக்காளர்கள் மனநிலையும்

அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகுக்கும் இன்றைய தினம் (நவ.3) மிக முக்கியமான நாள். அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 மக்களவை இடங்களுக்கும், 100 செனட் இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுதான் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியிடமே கட்டுப்பாடு இருக்குமா அல்லது ஜனநாயகக் கட்சி கைப்பற்றுமா என்பதை தீர்மானிக்க போகிறது. இந்திய நேரப்படி நாளை (நவ.4) காலை முதல் முடிவுகள் வெளிவர தொடங்கும். அமெரிக்காவில் 6 வெவ்வேறு டைம் ஜோன்கள் இருப்பதால், வாக்குப் பதிவு நேரம் மாகாணாத்துக்கு மாகாணம் மாறுபடும். கிழக்கு மாகாணங்களில் அமெரிக்க நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு, மேற்கு மாகாணங்களில் சில மணி நேரம் தாமதமாக தொடங்கும். இந்திய நேரப்படி பார்த்தால், இன்று (நவ.3) மாலை 4:30 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி, நாளை (நவ.4) காலை 10:30 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்? வாக்குப் பதிவு முடிந்து வாக்குச்சாவடிகள் மூடப்பட்டவுடனேயே வாக்கு எண்ணிக்கை செயல்முறை தொடங்கும். முதலில் முக்கிய மாகாணங்களின் வாக்குப்பதிவு முடிவடையும் போது, புதன்கிழமை (நவ.4) அதிகாலை 5.30 மணிக்கு (இந்திய நேரப்படி) முதற்கட்ட முடிவுகள் வெளிவரத் தொடங்கலாம். அமெரிக்காவில் நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது. நேரடி வாக்குகள், தபால் வாக்குகள் மற்றும் முன்கூட்டிய வாக்குகளை சரிபார்த்து எண்ணுவதற்கான நடைமுறைகளை ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியே முடிவு செய்கிறது. சில மாகாணங்கள் தேர்தல் நாளுக்கு முன்பே தபால் வாக்குகளை எண்ணத் தொடங்குகின்றன. மற்ற மாகாணங்களில் வாக்குகளை எண்ணுவதற்கு வெவ்வேறு விதிகள் உள்ளன. எனவே, வாக்குச்சாவடிகள் மூடப்பட்ட சில மணி நேரங்களில் ஆரம்ப முன்னிலை நிலவரங்கள் தெரிய வரக்கூடும். ஆனால், இந்த இடைக்கால தேர்தல் போன்ற கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளில், முடிவுகள் தெளிவாக தெரிய வர இன்னும் அதிக நேரம் ஆகலாம். தபால் வாக்குகள் அதிகம் உள்ள மாகாணங்களில் எண்ணிக்கை செயல்முறை குறிப்பாக நீண்ட நேரம் எடுக்கும். உதாரணமாக, கலிபோர்னியா போன்ற மாகாணங்களில் இறுதி எண்ணிக்கை இரவுக்குப் பிறகும் கூட நீண்ட நாட்கள் தொடரலாம். இடைக்கால தேர்தல் முடிவுகள் எப்போது தெரியவரும்? ஆரம்பகட்ட முடிவுகள் இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலையில் வெளிவரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நாடாளுமன்றத்தின் கட்டுப்பாடு யாரிடம் என்பதை உடனடியாக தீர்மானிக்க முடியாது. ட்ரம்ப் பதவிக் காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில் மக்களவை மற்றும் செனட் சபையை எந்தக் கட்சி கட்டுப்படுத்தும் என்பதை அறிய பல நாட்கள் ஆகலாம். உதாரணமாக, அலாஸ்காவில் நடைபெறும் செனட் போட்டியில் தரவரிசை தேர்வு முறையின் (Ranked-Choice) கீழ் கூடுதல் சுற்று எண்ணிக்கை தேவைப்பட்டால், அடுத்த சுற்று நவம்பர் 18-ம் தேதி நடக்கலாம். எனவே, அனைத்து முடிவுகளையும் அறிவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. போட்டி குறைவாக உள்ள தொகுதிகளில், இறுதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே செய்தி நிறுவனங்கள் வெற்றியாளரை அறிவித்துவிடக்கூடும். 2024-ம் ஆண்டு பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாடு எந்தக் கட்சியிடம் இருக்கும் என்பதை அறிய 8 நாட்கள் வரை ஆனது என்கிறது சில செய்திக் குறிப்புகள். என்ன நினைக்கிறார்கள் வாக்காளர்கள்? விலைவாசி அதிகரிப்பு... இதுதான் அமெரிக்க வாக்காளர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகக் கூறுவதாக இருக்கிறது. ட்ரம்ப் அதிபரான பின்னர், தீவிர வரி விதிப்புகள் (Tariffs) மற்றும் ஈரானுடனான போர் காரணமாக உணவு மற்றும் எரிபொருள் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன, எனவே வாக்குச்சாவடிக்கு செல்லும் பலரின் மனதில் இதுவே முதன்மையாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். விலைவாசி உயர்வு, வரி விதிப்பு, போர் காரணமாக ட்ரம்ப் மக்கள் செல்வாக்கை வெகுவாகவே இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் ட்ரம்ப் முன்பு பாதுகாப்பானதாக கருதப்பட்ட குடியரசுக் கட்சி கோட்டைகளிலும் பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. வார இறுதியில் அயோவா மற்றும் கன்சாஸில் ட்ரம்ப் பிரச்சாரம் செய்தது விமர்சனங்களை ஈர்த்துள்ளது. குடியரசுக் கட்சிக்கு பாரம்பரியமாக பாதுகாப்பானதாக கருதப்படும் கன்சாஸில் கூட, அக்கட்சி நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை பிரச்சார விளம்பரங்களில் கொட்டியுள்ளது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப் 10, 12, 15 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இடங்களில் கூட, தற்போது ஜனநாயகக் கட்சியினர் செனட் இடத்தை கைப்பற்றுவதற்கான மிகவும் சாத்தியமான வாய்ப்பை பெற்றுள்ளனர் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. அதேவேளையில் மாற்றுக் கருத்துகளும் நிலவுகின்றன. அதாவது, குடியரசுக் கட்சி வாக்காளர்கள் பலரும் அதிபர் மீது கோபத்தில் இருக்கிறார்கள்தான். ஆனால், ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கும் அளவுக்கு அவ்வளவு கோபத்தில் இல்லை. ட்ரம்ப்புக்குக் கிடைத்த குறைவான ஒப்புதல் மதிப்பீடுகள் எதிர்க்கட்சிக்கு ஆதரவாக மாறும் என்று கருதுவது தவறு. உண்மையில், தேர்தலுக்கு முன் எடுக்கப்பட்ட இறுதி கருத்துக்கணிப்புகளின்படி, ட்ரம்ப்பின் ஒப்புதல் மதிப்பீடு சுமார் 38% ஆக உள்ளது. இது குறைவுதான், ஆனால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட தேசிய NBC கருத்துக்கணிப்பு உட்பட அதே கருத்துக்கணிப்புகள், வாக்காளர்களில் 29% பேர் மட்டுமே ஜனநாயகக் கட்சியை சாதகமாக பார்க்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. வாக்காளர்களின் விரக்தி என்பது அவர்கள் கட்சி மாறி வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கான உத்தரவாதம் அல்ல என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். “அமெரிக்க இடைக்கால தேர்தலில், ஜனநாயகக் கட்சியினர் அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்றால், அது வாக்காளர்கள் அவர்களை விரும்புவதால் இருக்காது. அவர்களை கொஞ்சம் குறைவாக வெறுக்கிறார்கள் என்பதால்தான்” என்றொரு அமெரிக்க வாக்காளர் கூறியது கவனிக்கத்தக்கது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை