அமெரிக்க தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சியின் வெற்றியும் தோல்வியும் இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
அமெரிக்க தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சியின் வெற்றியும் தோல்வியும் இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

பட மூலாதாரம், AFP via Getty Images அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இதுவரை சுமார் 4 கோடி அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளதாகத் தோராயமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. நவம்பர் 3-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இந்திய நேரப்படி நவம்பர் 4-ஆம் தேதி காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தத் தேர்தலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இந்த இடைக்காலத் தேர்தலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் (கீழவை) 435 இடங்களுக்கும், செனட் சபையின் (மேலவை) 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தற்போது அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ளது. இந்த இரு அவைகளிலும் பெரும்பான்மையைப் பெற ஜனநாயகக் கட்சிக்கு தலா நான்கு இடங்கள் தேவைப்படுகின்றன. இந்த தேர்தல், அதிபர் டிரம்பின் மக்கள் செல்வாக்குக்கு மட்டுமல்லாமல், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவரது கட்சிக்கு இருக்கும் ஆதரவுக்கும் ஒரு சோதனையாக அமையும். குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்தால், டிரம்ப் தனது கொள்கைகளைச் செயல்படுத்துவதிலும், முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் பல்வேறு தடைகளைச் சந்திக்க நேரிடும். அப்படியானால், தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இந்தியாவுக்குச் சாதகமாக அமையுமா? குறிப்பாக, அமெரிக்காவின் வரி விதிப்புகள், எச்-1பி விசா, ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது போன்ற விவகாரங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பட மூலாதாரம், Getty Images அதிபரின் நான்கு ஆண்டு பதவிக்காலத்தின் நடுப்பகுதியில் இந்தத் தேர்தல்கள் நடைபெறுவதால், இவை 'இடைக்காலத் தேர்தல்கள்' என்று அழைக்கப்படுகின்றன. End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு அமெரிக்க நாடாளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டது. அவை பிரதிநிதிகள் சபை, செனட் சபை. நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் கூட்டாட்சிச் சட்டங்களை உருவாக்கி, நிறைவேற்றுவதே நாடாளுமன்றத்தின் முக்கியப் பணியாகும். இந்த தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் யாருக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்பதைத் தீர்மானிக்கும். அதாவது, அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்துமா அல்லது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அந்தக் கட்டுப்பாட்டைப் பெறுமா என்பது தெரியவரும். அதேநேரத்தில், டிரம்பின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க மக்கள் எந்த அளவுக்குத் திருப்தியடைந்துள்ளனர் என்பதைக் காட்டும் ஒரு முக்கியக் குறியீடாகவும் இந்தத் தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. பிரதிநிதிகள் சபை பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும் இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த அவையின் உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். புதிய சட்ட முன்வரைவுகள் பொதுவாக முதலில் இந்த அவையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதிக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 435 இடங்களில் குடியரசுக் கட்சி 219 இடங்களையும், ஜனநாயகக் கட்சி 214 இடங்களையும் கொண்டுள்ளன. இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. செனட் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்படும் சட்ட முன்வரைவுகளை அங்கீகரிக்கவோ நிராகரிக்கவோ இந்த அவைக்கு அதிகாரம் உண்டு. தற்போது செனட் சபையில் குடியரசுக் கட்சி 53 இடங்களையும், ஜனநாயகக் கட்சி 45 இடங்களையும் கொண்டுள்ளன. இரண்டு சுயேச்சை உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கின்றனர். மாகாண அளவிலான தேர்தல்கள் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் தேர்தலின்போது, அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் வாக்காளர்கள் மாகாண அளவில் முக்கியப் பதவிகளுக்கான பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுக்க உள்ளனர். குறிப்பாக, கலிபோர்னியா, ஃபுளோரிடா, ஜார்ஜியா, மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் ஆளுநர் தேர்தல்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. பட மூலாதாரம், Getty Images கடந்த காலங்களில், அமெரிக்க வாக்காளர்கள் அதிபரின் கட்சிக்கு எதிராக வாக்களித்து, அவருக்குத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய நிகழ்வுகள் பலமுறை நடந்துள்ளன. அதிபரின் செயல்பாடுகள் மீதான மக்கள் ஆதரவு குறைவாக இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருத்துக்கணிப்பு விவரங்களை வெளியிடும் சில்வர் புல்லட்டின் இணையதள தரவுகளின்படி, டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கியபோது, அவருக்கான மக்கள் ஆதரவு 50 சதவீதத்துக்கும் சற்று அதிகமாக இருந்தது. ஆனால், அக்டோபர் மாதத் தொடக்கத்தில் அது சுமார் 37 சதவீதமாகக் குறைந்தது. அதே காலகட்டத்தில், 61 சதவீத மக்கள் டிரம்பின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இருப்பினும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவுவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில தொகுதிகள் குடியரசுக் கட்சிக்கோ அல்லது ஜனநாயகக் கட்சிக்கோ உறுதியான ஆதரவு உள்ள இடங்களாகக் கருதப்படுகின்றன. பிபிசியின் அமெரிக்க ஊடகக் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ், அயோவா, நியூ ஹாம்ப்ஷயர் உள்ளிட்ட மாகாணங்களில் 10 செனட் இடங்களும், அரிசோனா, ஒஹாயோ உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள பிரதிநிதிகள் சபையின் 42 இடங்களும் கடும் போட்டி நிலவக்கூடியவை என்று கணித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால், அது அமெரிக்கா - இந்தியா உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதைப் புரிந்துகொள்ள, டிரம்பின் இரண்டு பதவிக்காலங்களிலும் அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு எவ்வாறு இருந்தது என்பதைப் பார்ப்பது அவசியம். வரலாற்று ரீதியாக, அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என இரு கட்சிகளிடமிருந்தும் இந்தியாவுக்கு ஆதரவு கிடைத்து வந்துள்ளது. இருப்பினும், இந்தியா சில முக்கிய ஒப்பந்தங்களை குடியரசுக் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் மேற்கொண்டுள்ளது. டிரம்பின் நிர்வாகத்திடமிருந்தும் இந்தியா இதுபோன்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தது. பிரதமர் மோதிக்கும் டிரம்புக்கும் இடையிலான நட்புறவு வலுவாக இருப்பதாகத் தெரிந்தது. டிரம்பின் முதல் பதவிக்காலத்தின் போது, அவரை "இந்தியாவின் சிறந்த வெள்ளை மாளிகை நண்பர்" என்று பிரதமர் மோதி குறிப்பிட்டிருந்தார். ஆனால், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் இந்தியாவின் பார்வையில் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாக அமைந்தது. இதனால், அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான தனது அணுகுமுறையையே இந்திய அரசு மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வெள்ளை மாளிகை வெளியிட்ட சில கருத்துகளுக்கு இந்திய அரசு வெளிப்படையாகப் பதிலளித்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. பட மூலாதாரம், AFP via Getty Images சுங்க வரி தொடர்பான பேச்சுவார்த்தைகளில், அமெரிக்காவின் வேளாண் மற்றும் பால் பொருட்களை அதிக அளவில் இந்தியச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. ஆனால், இந்தியாவின் வேளாண் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா சுங்க வரிச் சலுகைகளை வழங்க வேண்டும் என்று இந்தியா கோரியபோது, அந்தக் கோரிக்கையை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது. இந்தச் சுங்க வரி விதிப்புகள் தொடர்பான முக்கிய விமர்சனம் என்னவென்றால், அவை அமெரிக்காவுக்கே அதிகப் பலனளிப்பதுடன், இந்திய மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகின்றன என்பதே என நிபுணர்கள் கூறுகின்றனர். 2026 செப்டம்பரில், நியூயார்க்கில் நடைபெற்ற 'ஆசியா சொசைட்டி' நிகழ்ச்சியில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பயங்கரவாதம் மற்றும் வர்த்தகக் கொள்கைகள் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவை, குறிப்பாக டிரம்ப் நிர்வாகத்தை விமர்சித்தார். "ஒரு நட்பு நாடு நமது கவலைகளைப் புரிந்துகொள்ளத் தவறினால், அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கும்" என்று அவர் குறிப்பிட்டார். சுங்க வரி விவகாரம் மட்டுமின்றி, வேறு பல துறைகளிலும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தியாவுடனான உறவில் உரசலை ஏற்படுத்திய முக்கிய விவகாரங்களில் சுங்க வரி முதன்மையானதாக உள்ளது. இறக்குமதிப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இந்தியாவை 'சுங்க வரி மன்னன்' என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். 'பரஸ்பர சுங்க வரிகள்' என்ற பெயரில், எஃகு, அலுமினியம், ஜவுளி, ஆபரணங்கள் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்தது. இதனுடன், 'பொது முன்னுரிமை முறை' திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகையையும் அமெரிக்கா ரத்து செய்தது. இந்தத் திட்டத்தின்படி, குறிப்பிட்ட இந்தியப் பொருட்கள் இறக்குமதி வரிகள் ஏதுமின்றி அமெரிக்கச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தன. சமீபத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பைக்கு வருகை தந்தார். ஆனால், நாட்டின் தலைநகரான டெல்லிக்குச் செல்லவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்துப் பேசிய போதிலும், அவரது பயணத்தின் முக்கிய நோக்கம் வர்த்தகம் சார்ந்ததாகவே இருந்தது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்தியா மீது தண்டனை விதிக்கும் நோக்கிலோ பாதிக்கும் நோக்கிலோ இந்தச் சுங்க வரிகள் விதிக்கப்படவில்லை என்று மார்கோ ரூபியோ தெரிவித்தார். அமெரிக்காவின் ஒட்டுமொத்த வெளியுறவுக் கொள்கை உத்தியில் ரஷ்யா - யுக்ரேன் போரும் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் கூறினார். இந்தியாவுடனான உறவுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிப்பதாகவும், சுங்க வரிகளைத் தண்டனை நடவடிக்கையாகப் பார்க்காமல், ரஷ்யா - யுக்ரேன் போர் தொடர்பான அமெரிக்காவின் கொள்கை அணுகுமுறையின் ஒரு பகுதியாகவே புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ரூபியோவின் கருத்துகள் உணர்த்துகின்றன. இருப்பினும், சுங்க வரி தொடர்பான நிச்சயமற்ற நிலை தொடர்ந்து நீடிக்கிறது. பட மூலாதாரம், AFP via Getty Images அமெரிக்க வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதாகக் கூறி டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கொள்கைகள், இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையிலும், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மீதும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா வழங்கும் ஹெச்-1பி விசாக்களில் கணிசமானவை, இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், விசா விண்ணப்பங்களைத் தீவிரமாகப் பரிசீலிப்பது, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் விகிதம் அதிகரிப்பது, விசா கட்டணங்களை உயர்த்துவது அல்லது கூடுதல் கட்டணங்களை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டன. இவை டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பாதித்துள்ளன. முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருக்கும் குடியேறிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாகப் பல இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரஷ்யாவுடனான வர்த்தகமும் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திய முக்கிய விவகாரமாக மாறியது. பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி விநியோகம் தொடர்பான இந்தியாவின் கொள்கைகள், அதன் தேசிய நலன்களின் அடிப்படையிலேயே வகுக்கப்படுகின்றன; அவை பல நேரங்களில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையுடன் முரண்படுகின்றன. அமெரிக்காவின் தொடர் அழுத்தங்களுக்கு மத்தியிலும், இந்தியா ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவிடமிருந்து எரிசக்திப் பொருட்களை வாங்கும் நாடுகள் மீது கூடுதல் சுங்க வரி விதிக்கப்படும் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன. அமெரிக்கா - இந்தியா உறவு குறித்து நிபுணர்கள் வெவ்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'சர்வதேச அமைதிக்கான கார்னெகி அறக்கட்டளையின்' (Carnegie Endowment for International Peace) தெற்காசியத் திட்ட இயக்குநர் மிலன் வைஷ்ணவ், அல் ஜசீராவிடம் பேசுகையில், "அமெரிக்க செனட் சபையில் உள்ள ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள், டிரம்ப் நிர்வாகம் அமெரிக்கா - இந்தியா உறவைக் கையாண்ட விதம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர்" என்றார். "இந்தியாவின் அரசியல், பொருளாதாரம் அல்லது வெளியுறவுக் கொள்கைகளை அவர்கள் விமர்சிக்கலாம். ஆனாலும், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வலுவான கூட்டாண்மை தொடர வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உண்மையாகவே நம்புகின்றனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்தியாவிடம் சற்றுக் கனிவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கக்கூடும்" என்றும் அவர் குறிப்பிட்டார். இடைக்காலத் தேர்தல் முடிவுகள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து, வாஷிங்டனில் உள்ள 'வில்சன் சென்டர்' அமைப்பின் தெற்காசிய நிபுணர் மைக்கேல் குகல்மேன் அல் ஜசீராவிடம் பேசினார். "இந்தத் தேர்தல் முடிவுகள் டிரம்பின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை. குறிப்பாக, இந்தியா தொடர்பான கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை" என்றார். "டிரம்ப் அரசியலமைப்புச் சட்டப்படி மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, புதுடெல்லியுடனான உறவில் அமெரிக்காவுக்குப் பயனளிக்கும் என்று அவர் கருதும் கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பார்" என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஓர் அவையில் குடியரசுக் கட்சியின் பலம் குறைந்தால், சட்டங்களை நிறைவேற்ற டிரம்ப் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவைப் பெற வேண்டியிருக்கும். டிரம்பின் பல கொள்கைகளை ஜனநாயகக் கட்சியினர் ஏற்கெனவே வெளிப்படையாக எதிர்த்து வருவதால், சுங்க வரிகள் உள்ளிட்ட சில விவகாரங்களில் இந்தியாவுக்குச் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை