அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் போப் லியோ தபால் மூலம் தனது வாக்கைச் செலுத்தினாா். இதன்மூலம், அமெரிக்க தோ்தலில் வாக்களித்த முதல் போப் என்ற வரலாற்றை அவா் பதிவு செய்துள்ளாா். அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் போப் லியோ தபால் மூலம் தனது வாக்கைச் செலுத்தினாா். இதன்மூலம், அமெரிக்க தோ்தலில் வாக்களித்த முதல் போப் என்ற வரலாற்றை அவா் பதிவு செய்துள்ளாா். அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்தவரான போப் லியோ, வரும் செவ்வாய்க்கிழமை (நவ. 3) நடைபெறவுள்ள இடைக்காலத் தோ்தலுக்காக சிகாகோவில் தபால் மூலம் தனது வாக்கைச் செலுத்தியதாக வாடிகன் நிா்வாகம் வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தியது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘ராபா்ட் ப்ரீவோஸ்ட் என்ற இயற்பெயா் கொண்ட போப் லியோ, அமெரிக்க குடிமகன் எனும் அடிப்படையில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளாா். முன்னதாக, பெரு நாட்டில் வசித்தபோதும் தகுதி பெற்றிருந்த அனைத்துத் தோ்தல்களிலும் அவா் தவறாமல் வாக்களித்துள்ளாா். ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை மற்றும் கடமை என்பதில் போப் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அமெரிக்க தோ்தலில் வாக்களித்த போப் லியோ
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗