அம்மா - அப்பா இல்லை.. பள்ளியில் 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் கருவியால் வெட்டிய ஹேமந்த் யார்? ஷாக் பின்னணி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
அம்மா - அப்பா இல்லை.. பள்ளியில் 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் கருவியால் வெட்டிய ஹேமந்த் யார்? ஷாக் பின்னணி

அமராவதி: அரசு பள்ளிக்குள் நுழைந்து 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் இயந்திரம் கொண்ட வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் 21 வயது இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள பள்ளி புகுந்து மாணவியை வெட்டி கொல்ல முயன்றது ஏன்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு மண்டல் மாவட்ட பரிஷத் உயர்நிலை பள்ளியில் உள்ளது. இந்த பள்ளியில் அய்யவரிபள்ளி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று காலையில் 10ம் வகுப்புக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அய்யவரிபள்ளி கிராமத்தை சேர்ந்த மாணவியை மரம் அறுக்கும் இயந்திரத்தால் வெட்டினார். தடுக்கப்போன மாணவி மீதும் தாக்குதல் நடத்தினார். இதில் இருமாணவிகளும் காயமடைந்த நிலையில் அந்த இளைஞர் அங்கிருந்து ஓடினார். இந்த சம்பவத்தில் மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட மாணவி படுகாயமடைந்துள்ளார். இன்னொரு மாணவி லேசான காயமடைந்துள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளைஞர் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்து மரம்வெட்டு கருவியால் மாணவியை வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் மாணவியை மரம் அறுக்கும் இயந்திரத்தால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான நபரின் பெயர் ஹேமந்த். வயது 21. சொந்த ஊர் தர்மாவரம் அருகே உள்ள நாகலுரி கிராமம். இவருக்கு அம்மா - அப்பா கிடையாது. இருவரும் இறந்துவிட்டனர். இதனால் ஹேமந்த் தனது அக்காள் வீட்டில் வசித்து வந்தார். அக்காள் வீடு அய்யவரிபள்ளி கிராமத்தில் உள்ளது. தற்போது மரம் அறுக்கும் கருவியால் வெட்டப்பட்ட மாணவியும் அய்யகரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தான். இருவரும் தூரத்து உறவினர்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரே கிராமம் இருப்பதால் ஹேமந்துக்கு 10ம் வகுப்பு மாணவி மீது காதல் வந்துள்ளது. இதனால் மாணவியுடன் நெருங்கி பழக விரும்பினார். ஆனால் மாணவி அதற்கு தடை போட்டதோடு, அவரது காதலை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஹேமந்த் விடவில்லை. தொடர்ந்து மாணவியை விரட்டி விரட்டி காதலை ஏற்கும்படி தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் மாணவி மனம்மாறவில்லை. இதனால் கோபமடைந்த மாணவி தனக்கு காதல் தொல்லை தந்தால் அதுபற்றி பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹேமந்த், மாணவியை மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு வெட்டி கொல்ல முயன்றது தெரியவந்துள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை