அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல், பொது வேட்பாளர், ஆதரவு சலசலப்புகளுக்கு சீமான் விளக்கம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல், பொது வேட்பாளர், ஆதரவு சலசலப்புகளுக்கு சீமான் விளக்கம்

படம்: நா.தங்கரத்தினம் கமுதி: “என்னை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக திமுகவோ, அதிமுகவோ, நாதகவோ முடிவு எடுக்கவில்லை. இந்தப் பேச்சை தவெக கட்சிக்காரர்களும் நிர்வாகிகளும்தான் கிளப்பிவிட்டனர்” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்ற நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பதவி என்பது சேவைதானே ஒழிய, சேவைதான் அதிகாரம் என்ற எண்ணம் கொண்டவனிடம் அதிகாரம் செல்லாதிருந்தால் நாட்டு மக்களுக்கு நலன் என்பது பகல் கனவாகிவிடும் என்று போதித்த அரசியல் சீர்திருத்தவாதி தேவர் திருமகனார். வாக்குக்கு காசு கொடுப்பவர் பாவி, வாக்குக்கு காசு வாங்கிக் கொண்டு வாக்கு செலுத்துபவன் தேசத்துரோகி என்று இன்றைக்கு நடக்கும் இழிநிலையை அன்றே சாடியவர். பாலை விற்பதுபோல் ஒருநாள் இவர்கள் தண்ணீரை விற்பார்கள், புறாக்கள் கூடு கட்டி வாழ்வதுபோல் மக்கள் வீடு கட்டிவாழ்வார்கள். விளைநிலங்களை எல்லாம் வீட்டுமனைகளாக விற்பார்கள் என்று இன்று நடக்கிற அவலங்களை எல்லாம் அன்றே கணித்து போதித்த காலஞானி. மலர் மாலைக்கு கழுத்தை நீட்டுவதுபோல் மரணக்கயிற்றுக்கு எவன் துணிந்து அச்சமின்றி கழுத்தை நீட்டுகிறானோ அவனே வீரன் என்று போதித்து அடுத்தடுத்த தலைமுறைக்கு தன்மான உணர்வையும், இனமான உணர்வையும் வீரத்தை ஊட்டிய வீரப்பெருமகனார் தேவர். அவர் காட்டிய பாதையில் தன்னலமற்ற தூய்மையான அரசியலை கட்டியெழுப்புவோம். அவரது நாளில் உறுதியேற்கிறோம். அவரது நினைவைப் போற்றி கனவை சுமந்து செல்வோம். என்னை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக திமுகவோ, அதிமுகவோ, நாதகவோ முடிவு எடுக்கவில்லை. இந்த பேச்சை கிளப்பிவிட்டது யாரென உங்களுக்குத் தெரியும். அதை சொல்லவேண்டும் என்றால் சொல்கிறேன். தவெக கட்சிக்காரர்களும் நிர்வாகிகளும்தான் கிளப்பிவிட்டனர். ஈரோடு கிழக்கில் எல்லா கட்சிகளும் இருந்தபோதும் நாதகவும், திமுகவும்தான் போட்டியிட்டோம். அப்போது நாங்கள் பொது வேட்பாளரா என நீங்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை. எங்களது கட்சி வேட்பாளர்கள் அனைவரும பொது வேட்பாளர்கள்தான். ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு, மதத்துக்கு, இனத்துக்கு என இல்லை. உலக பொதுமைக்கு அரசியலை வைத்தவன் தமிழன்தான். அரசியலில் தேர்தலை ஒரு போட்டியாக நினைக்கவில்லை. அதனை ஓர் அறப்போர் என நினைக்கிறோம். எங்களுக்கு இலக்கும் கனவும் இருக்கிறது. அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் இருப்பதை வரவேற்கிறோம். மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை சிலைக்கு பின்புறம் ஏன் முதல்வர் படம் வைக்கிறீர்கள். எனது கனவை நிறைவேற்ற தனித்து நின்று போராட வேண்டியுள்ளது. ஈரோடு கிழக்கில் தனித்து போட்டியிட்டோம். அம்பாசமுத்திரத்திலும் தனித்து போட்டியிடுவோம். அவர்கள் போட்டியிடவில்லை என முடிவு எடுக்கும்போது பெருந்தன்மையாக வரவேற்கிறேன். ஏற்கிறன். நான் போட்டியிடுவது கட்சி தலைவர்கள், சார்ந்து கட்சியை சார்ந்தல்ல, மக்கள் நலன் சார்ந்தது. என்னை ஒருமுறை சட்டசபைக்கு அனுப்பித்தான் பாருங்கள். அம்பாசமுத்திரத்தில் ஜீரோ கட்சிக்கும், ஹீரோ கட்சிக்கும்தான் போட்டி. 234 தொகுதியில் அம்பாசமுத்திரத்தை தொகுதியை தலைசிறந்த தொகுதியாக மாற்றுவேன். எப்படி வேலை செய்ய செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும். மற்ற கட்சிகள் அந்த மாதிரி முடிவை எடுத்தால் மகிழ்ச்சியோடு ஏற்பேன். தமிழக அரசு பத்திரப் பதிவுத்துறையை தனியாருக்கு கொடுக்கின்றனர். அரசு வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் வேலையை அமெரிக்க முதலாளிக்கு கொடுக்கின்றனர். ஆனால் மது குடிப்பதற்கு முன்பதிவு செய்யச் சொல்வது என்பது நாடு நன்றாக முன்னேறித்தான் போகிறது. அதுவும் ஒரு நல்ல மாற்றம்தான்” என்று அவர் கூறினார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை