அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவா? - மு.க.ஸ்டாலின் சூசக பதில்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவா? - மு.க.ஸ்டாலின் சூசக பதில்

ராமநாதபுரம்: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவா? என்ற கேள்விக்கு ‘தேர்தல் தேதி அறிவிக்கட்டும், அதுபற்றி பிறகு பேசலாம்’ என முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்திவிழாவும், 64-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று அரசியல் விழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று அக்.30-ல் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் தவெக அமைச்சர்கள் நிர்மல் குமார், மதன்ராஜா, ராஜீவ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து திமுக சார்பில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி, ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம், செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் நடத்திய விடுதலை போராட்டத்திற்கு துணை நின்றவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். ஆங்கிலேய அரசின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து போராடியவர். சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டவர் தேவர். அத்ததைய பெருமகனாரின் நினைவிடத்தில் எங்களது வணக்கத்தை செலுத்துவதற்கு பெருமைப்படுகிறோம். திமுக ஆட்சிக்காலத்தில் தேவர் நினைவிட வளாகத்தில் பொதுமக்கள் வசதிக்காக 2 மண்டபங்கள் அமைக்கப்படும் என்று சொல்லி 2024-ம் ஆண்டு முத்துராமலிங்கத்தேவர் அரங்கத்தை நான் திறந்து வைத்தேன். தேசத்திற்காக போராடிய தேவரின் பெருமைகளை போற்றும் வகையில் திமுக ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தேவரின் நூற்றாண்டுவிழாவை 2007-ம் ஆண்டு சிறப்பாக கொண்டாடியவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி. மதுரை கோரிப்பாளையத்தில் மூக்கையாத்தேவரின் கனவை சீரிய முயற்சியில் அமைத்து தந்தவர் கருணாநிதி. படம் : நா. தங்கரத்தினம் அன்றைய குடியரசுத் தலைவர் விவி.கிரி அவரது சிலையை திறந்து வைத்தார். மதுரை ஆண்டாள்புரம் பாலத்திற்கும் தேவரின் பெயரை சூட்டி போற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. எனது தலைமையிலான அரசும் பல்வேறு பணிகளை செய்துள்ளோம். ஆக கோழையாக இருக்கக்கூடாது போராடி வெற்றி பெற வேண்டும் என்று தேவர் சொன்ன திருவாசகம் தான் இன்றைக்கும் என் மனதில் நிலைத்து நிற்கிறது. அவரது வழியை நிச்சயமாக பின்பற்றுவோம். அந்த உறுதியை உங்கள் முன்னிலையில் எடுத்துக்கொள்கிறோம். தமிழகத்தின் நிலை உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். இந்த ஆட்சி வர வேண்டும் என விரும்பி ஓட்டளித்தவர்கள் எல்லாம் இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற நிலையிலே போய்க்கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் மக்கள் எப்படி பேட்டி கொடுக்கிறாரகள் என்பதை பார்த்திருப்பீர்கள். விலைவாசி விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. சிறைச்சாலைகள் கைதிகள் தப்பித்து ஓடும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. மக்களும் துன்பங்கள் துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதோடு திடீர் திடீரென காணாமல் போகும் செய்திகள்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் முதல்வர் விஜய் கவலைப்படவில்லை. சினிமாவில் ஹீரோவாக நடித்ததை நம்பி, நிஜத்திலும் அவர் ஹீரோவாக செயல்படுவார் என நம்பி வாக்களித்த மக்கள் எல்லாம் இன்றைக்கு ஏமாற்றத்தில் இருப்பதுதான் உண்மை. அவர் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. காலையில் 9 மணிக்கெல்லாம் கோட் சூட் போட்டுக்கொண்டு அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வதுபோல் வந்துவிட்டு மாலை 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு போய் விடுகிறார். இதுதான் நிலைமை. தவெக ஆட்சிக்கு ஜீரோ மதிப்பெண்தான். தவெக அரசின் கைது நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொண்டிருக்கிறோம். நீதிமன்றத்தில் குற்றவாளிகள் இல்லை என நிரூபிப்போம். நெருக்கடிகளை எதிர்கொண்டவர்கள், மிசா சட்டம், தடா சட்டம், பொடா சட்டத்தை எதிர்கொண்டவர்கள். எங்களுக்கு இதெல்லாம் பெரிய விசயமில்லை. சந்திக்க வேண்டிய நேரத்தில் சந்திப்போம். திமுக - அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக தவெக அமைச்சர்கள் கூறுகின்றனர் என கேட்டதற்கு, ‘அப்படியா’ என பதிலளித்தார். மேலும், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? என கேட்டதற்கு, ‘தேர்தல் தேதி அறிவிக்கட்டும், அதுபற்றி பிறகு பேசலாம்’ என்றார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை