அம்பாசமுத்திரத்தில் சீமானை ஏன் திமுக - அதிமுக பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும்! அதிர வைக்கும் காரணங்கள்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
அம்பாசமுத்திரத்தில் சீமானை ஏன் திமுக - அதிமுக பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும்! அதிர வைக்கும் காரணங்கள்

அம்பாசமுத்திரம்: ஆட்சிப் பொறுப்பில் உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் வென்றது. மதுராந்தகம், தாராபுரம் இரண்டிலும்.. ஆளுங்கட்சியான தவெகவை எதிர்த்து பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தனித்தனியாகக் களம் கண்டு தோல்வியைச் சந்தித்தன. இந்தத் தோல்விகள் ஒரு முக்கியமான அரசியல் பாடத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறும் வரை தவெகவை யாராலும் அசைக்க முடியாது என்பதுதான் அந்தப் பாடம். இந்தச் சூழலில்தான், காலியாக உள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டும் என்றால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது பழைய பகைமையை மறந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் 'பொது வேட்பாளராக' ஆதரிக்க வேண்டும் என்ற அரசியல் வியூகம் வலுப்பெற்றுள்ளது. மதுராந்தகம், தாராபுரம்: தவறிய வெற்றிக் கணக்கு சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், எதிர்க்கட்சிகள் ஒன்றுசேராதது தவெகவுக்கு எவ்வளவு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது என்பது பாமர மக்களுக்கும் எளிதாகப் புரியும்: தவெக (கே. மரகதம் குமரவேல்): 74,048 வாக்குகள் (வெற்றி) திமுக (இ. பரந்தாமன்): 54,008 வாக்குகள் அதிமுக (எஸ். கணிதாசம்பத்): 47,450 வாக்குகள் வெற்றி வித்தியாசம்: 20,040 வாக்குகள் இங்கு திமுகவும் அதிமுகவும் பெற்ற வாக்குகளை ஒன்றாகக் கூட்டினால் மொத்தம் 1,01,458 வாக்குகள் வருகின்றன. இது வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் வாங்கிய 74,048 வாக்குகளை விட சுமார் 27,410 வாக்குகள் அதிகம்* அதாவது, எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு பொது வேட்பாளர் மட்டும் நின்றிருந்தால், தவெக 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கும். தவெக (பி. சத்யபாமா): 66,841 வாக்குகள் (வெற்றி) திமுக (எஸ். சுகன்யா): 57,370 வாக்குகள் அதிமுக (கே. பானுமதி): 45,280 வாக்குகள் வெற்றி வித்தியாசம்: 9,471 வாக்குகள் தாராபுரத்திலும் இதே நிலைதான். திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகளின் கூடுதல் 1,02,650 வாக்குகள். இது தவெக வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட 35,809 வாக்குகள் அதிகம். வெறும் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வென்ற இடத்தில், எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தால் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்திருக்க முடியும். இந்த இரண்டு தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததுதான் தவெக எளிதாக வெற்றி பெறக் காரணமாக அமைந்தது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன: 1. அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம்) 2. விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) 3. கரூர் (கரூர் மாவட்டம்) 4. பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) 5. திருச்சிராப்பள்ளி கிழக்கு (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) இந்த 5 தொகுதிகளிலும் தவெக நிறுத்தவுள்ள அல்லது அக்கட்சியில் இணைந்துள்ள வேட்பாளர்கள் அனைவரும் சாதாரண நபர்கள் அல்ல; பல வருடங்களாகத் தேர்தல் களத்தில் நின்று கொடி கட்டிப் பறந்த ஆளுமைகள்: அம்பாசமுத்திரம்: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா. தொகுதி முழுவதும் அசைக்க முடியாத பணபலம், தனிப்பட்ட வாக்கு வங்கி மற்றும் வலுவான சமூக செல்வாக்கு கொண்டவர். விராலிமலை: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் களமிறங்கும் நிலையில், விராலிமலையில் அவரது மக்கள் தொடர்பை வீழ்த்துவது அத்தனை எளிதல்ல. கரூர்: கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய முகமான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெக களத்திற்குப் பலம் சேர்க்கும் சூழல் நிலவுகிறது. முக்கியமாக ஜாதி வாக்குகள் அவருக்கு ஆதரவாக அப்படியேவரும் . பெருந்துறை & திருச்சி கிழக்கு: இந்தத் தொகுதிகளிலும் உள்ளூர் அளவில் செல்வாக்குமிக்க சீனியர் தலைவர்கள் தவெகவின் வெற்றி முகமாக மாறத் தயாராகி வருகின்றனர். இப்படி தொகுதி முழுவதும் ஆழமாக வேரூன்றிய பெரும் தலைவர்களைத் தங்கள் வசம் வைத்துள்ள ஆளுங்கட்சியான தவெகவை, வழக்கம்போல திமுக தனியாகவும், அதிமுக தனியாகவும் எதிர்த்து நின்றால், மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தை விட மிக மோசமான தோல்விகளைச் சந்திக்க நேரிடும். இந்த நெருக்கடியான சூழலில்தான், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட போவதாக தெரிவித்திருப்பது ஒரு பொன்னான வாய்ப்பாக மாறியுள்ளது. திமுகவும் அதிமுகவும் சீமானைப் பொது வேட்பாளராக ஆதரிக்க வேண்டியதற்கான முக்கிய காரணங்கள் இதோ: அதிமுக வேட்பாளருக்கு திமுக ஆதரவு தருவதோ, அல்லது திமுக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு தருவதோ அந்தந்தக் கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களால் ஒருபோதும் ஜீரணிக்க முடியாத விஷயம். இரு கட்சிகளுக்குமே கௌரவப் பிரச்சனை குறுக்கே நிற்கும். ஆனால், இருவருமே பொதுவான ஒரு மூன்றாவது சக்தியான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை ஆதரிக்கும்போது, அந்த 'ஈகோ' தகர்ந்துவிடும். ஆளுங்கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே முன்னிற்கும். அம்பாசமுத்திரத்தில் ஏற்கெனவே அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கணிசமான பாரம்பரிய வாக்குகள் உள்ளன. அதேசமயம் தென் மாவட்டங்களில், குறிப்பாக அம்பாசமுத்திரத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வலுவான வாக்கு வங்கி உண்டு. திமுக + அதிமுக + நாம் தமிழர் வாக்குகள் ஒன்று சேரும்போது, அது தவெகவின் வேட்பாளர் இசக்கி சுப்பையாவால் நெருங்கவே முடியாத இமாலய வாக்கு வங்கியாக மாறும். சீமான் தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட மிகச்சிறந்த பேச்சாளர். அவர் நேரடியாகக் களமிறங்கினால், அந்தத் தொகுதியின் தேர்தல் களம் மாநில அளவிலான பேசுபொருளாக மாறும். ஆளும் தவெக அரசின் குறைகளைத் துணிச்சலாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திப் பேசும் திறன் சீமானுக்கு உண்டு. எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவருக்குப் பின்னால் நின்றால், அது ஒரு மக்கள் இயக்கமாகவே உருவெடுக்கும். தவெகவின் இந்தத் தொடர் வெற்றி வேட்டை தொடர்ந்தால், தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும் சூழல் உருவாகும். தவெகவை இப்போதே ஒரு இடைத்தேர்தலில் தடுத்து நிறுத்தாவிட்டால், அது அக்கட்சியின் அசுர பலத்தை மேலும் அதிகரிக்கும். சீமானை வெற்றி பெற வைப்பதன் மூலம், தவெகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை எதிர்க்கட்சிகள் மக்களுக்கு உணர்த்த முடியும். அரசியல் என்பது கொள்கைகளைத் தாண்டி சில நேரங்களில் சாணக்கியத்தனமான வியூகங்களை அடிப்படையாகக் கொண்டது. கடந்த இரண்டு இடைத்தேர்தல்களில் வாக்குகளைப் பிரித்துக் கொண்டு தவெகவுக்கு வெற்றியைத் தாரைவார்த்தது போதும். அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையாவை போன்ற வலிமையான நபரை எதிர்த்துத் தனித்தனியாகப் போட்டியிட்டு மீண்டும் தோற்பதை விட, சீமானை ஒரு முகமாக முன்னிறுத்தி அவரைச் சட்டமன்றத்திற்குள் அனுப்புவதுதான் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே தற்போதைய அரசியல் பாதுகாப்பைத் தரும். எதிரியின் பலத்தை உடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் திமுகவும் அதிமுகவும் இந்த வரலாற்று முடிவை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை