அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ. 75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி என முதல்வர் விஜய் அறிவிப்பு... விவசாயிகளுடன் முதல்வர் விஜய். - கோப்புப் படம் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ. 75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியில் படிப்படியாக கூடுதல் சலுகைகளை முதல்வர் விஜய் அறிவித்து வருகிறார். அதன்படி முன்னதாக, ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு முழுவதுமாக தள்ளுபடி எனவும் ரூ. 75,000 -க்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முதல்வர் விஜய் இன்று பயிர்க்கடன் தள்ளுபடியில் கூடுதல் சலுகையை அறிவித்துள்ளார். அதன்படி பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 தள்ளுபடி என அறிவித்துள்ளார். "கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ. 75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. தள்ளுபடிக்குத் தகுதியான பயிர்க் கடன்களுக்கான கால வரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிக்கப்படுகிறது. விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக அரசு ஒட்டுமொத்தமாக ரூ. 9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 பயிர்க்கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗