அன்பில் மகேஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை: நவ. 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அன்பில் மகேஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை: நவ. 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் நவ. 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதைப் பற்றி... திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் நவ. 2 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ. 100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை கடந்த அக். 26 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு முன்பிணை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியதையடுத்து, நவ. 6 ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நேரடியாக லஞ்சம் பெற்றதாக தனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தனது பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பெற்றார்கள் என்பதற்காக தன்னை எப்படி பொறுப்பாக்க முடியும். கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்பதால், ஜாமீன் வழங்க வேண்டும்” என்றும் அவர் கோரியிருந்தார். அதேபோல், அன்பில் மகேஸை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், “தலைமறைவாக இருக்கும் முத்துக்குமாருக்கும், அன்பில் மகேஸுக்கு இடையேயான தொடர்பு குறித்தும், பணப்பரிமாற்றங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளதால் அன்பில் மகேஸை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஸின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அன்பில் மகேஸ் ஜாமீன் கோரிய மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நவ. 2-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல, ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அன்பில் மகேஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ. 2-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதனிடையே, தனது இல்லத்தில் நடந்த சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை ஒப்படைக்கக் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையையும் நவ. 2-க்கு தள்ளிவைத்துள்ளார். The Madras High Court has adjourned the hearing on the bail plea of ​​former DMK minister Anbil Mahesh to November 2. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை