அன்பில் மகேஸ் கைது பற்றி தற்போது கருத்து கூற இயலாது என திருமாவளவன் தெரிவித்துள்ளது குறித்து... திருமாவளவன் / அன்பில் மகேஸ் - எக்ஸ் அன்பில் மகேஸ் கைது பற்றி தற்போது கருத்து கூற இயலாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (அக். 29) தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ''அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் விசாரணைக்காக கைது செய்துள்ளதாக காவல் துறை கூறியிருக்கிறது. அதனால் விசாரணை முடியும் முன்பு, இப்போதைக்கு கருத்து கூறுவது சரியல்ல'' எனக் குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஸ் இருந்தபோது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ. 100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள இல்லத்தில் அன்பில் மகேஸை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 26 ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்