அன்பில் மகேஸ் பிணை கோரிய மனு: மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அன்பில் மகேஸ் பிணை கோரிய மனு: மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

நவ. 2-ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவு - கோப்புப் படம் ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பிணை கோரிய மனு தொடா்பாக நவ. 2-ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த திமுக ஆட்சியில் தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்டவை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியாா் பள்ளிகள் சங்கம் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக் கோரி அன்பில் மகேஸ் ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், நேரடியாக லஞ்சம் பெற்ாக தனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி பணம் பெற்றாா்கள் என்பதற்காக தன்னை எப்படி பொறுப்பாக்க முடியும்?. கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு அவசியம் என்பதால், பிணை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தாா். அதேபோல், அன்பில் மகேஸை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸாரும் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுவில், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் முத்துக்குமாருக்கும், அன்பில் மகேஸுக்கும் இடையேயான தொடா்பு குறித்தும், பணப் பரிமாற்றங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளதால், அன்பில் மகேஸை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது பிணை கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பிணை கோரிய மனுவுக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் நவ. 2-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா். காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தாக்கல் செய்த மனுவுக்கு அன்பில் மகேஸ் தரப்பில் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதனிடையே, தனது இல்லத்தில் நடந்த சோதனையின்போது, பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை ஒப்படைக்கக் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்த மனு மீதான விசாரணையையும் நவ. 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை