அன்பில் மகேஸை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான உத்தரவு நவ.2-க்கு தள்ளிவைப்பு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
அன்பில் மகேஸை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான உத்தரவு நவ.2-க்கு தள்ளிவைப்பு

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு அனுமதிகளை வழங்க லஞ்சம் பெற்றதாகக் கைதான திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான உத்தரவை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கோடிக்கணக்கில் லஞ்சமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது காவல் துறை நவம்பர் 2-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தெரிய வருவதாக கூறிவரும் காவல் துறை, அன்பில் மகேஸை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்பில் மகேஸ் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். மகேஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அன்பில் மகேஸ் தரப்பில், ‘சரியான உணவு வழங்காததால் 2 கிலோ முதல் 4 கிலோ வரை அன்பிலின் உடல் எடை குறைந்துள்ளது. அக்டோபர் 29-ல் இருந்து நவம்பர் 2 வரை போலீஸ் காவல் கேட்டிருந்தனர். கைது செய்யப்படுவதற்கு நீண்ட நாள்கள் முன்னதாகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 16-ல் அன்பில் மகேஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, செப்டம்பர் 18-ல் 8 மணி நேரம் அன்பில் மகேஸிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அனைத்துக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. வேறு ஏதேனும் ஆவணங்கள் தேவைப்பட்டால் கேளுங்கள் தருகிறோம் என நாங்கள் கூறினோம். விசாரணையில் இருந்து எதுவும் மறைக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ’பள்ளிகளுக்கு அங்கீகராம் அளிக்க நடத்தப்பட்ட கூட்டத்தில் அமைச்சர், அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பிப்பது ஊழலுக்கு வழிவகுக்கும். 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்ற வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அமைச்சர் அதனை அதிகாரிகளிடம் வழங்க உத்தரவிட்டார். பல துறைகள் ஆலோசித்து தான் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தான் தற்போது ஊழல் என்கின்றனர். இதெல்லாம் எங்களுக்கு பழக்கப்பட்டது தான். 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரியவர்கள் தற்போது இந்த வழக்கில் நாங்கள்தான் சாட்சி என கூறுகிறார்கள். அங்கீகாரம் புதுப்பிக்கும் விதியை மாற்றக் கோரியவர்கள் தற்போது சாட்சிகளாக உள்ளனர். சட்டப்படி பார்த்தால் அவர்களை தற்போது கைது செய்திருக்க வேண்டும். அவர்கள் சிறையில் இருந்திருக்க வேண்டும். அவர்கள் கூற்றுப்படி அவர்கள்தான் லஞ்சம் கொடுத்தவர்கள் என்று கூறி, கூட்டாக எடுக்கப்பட்ட முடிவில் அன்பில் மகேஸ் மீது மட்டும் வழக்கா? அன்பில் மகேஸ் பணம் கேட்டதாகவோ அல்லது வாங்கியதாகவோ ஆதாரம் இருக்கிறதா?’ என மகேஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், ‘அரசியல் காரணங்களால்தான் அன்பில் மகேஸ் தற்போது சிறையில் இருக்கிறார். இந்த விவகாரத்தில் நியாயமான, சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும். 200-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. ஆவணங்களை வழங்கியுள்ளோம். காவல் துறையின் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார். இதன் பின்னரும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. எங்கும் ஓடிவிடமாட்டார். காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். சோதனைக்கு வந்தபோது போலீஸாரை யாரும் தடுக்கவில்லை. வந்து சோதனை செய்யுங்கள் என்று தான் சொன்னோம். அன்பில் மகேஸ் அதிகாரத்தை வைத்து நான் தப்பவில்லை. ஆனால், முத்துக்குமாரை அவர் தப்பிக்க வைத்ததாக கூறுகிறார்கள்’ என்றும் மகேஸ் தரப்பு வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் விளக்கம் அளித்தார். மேலும், ‘விசாரணை நடத்துங்கள், ஆனால் விசாரணையை துன்புறுத்தலாக மாற்றாதீர்கள். அன்பில் மகேஸுக்கு ஜாமீன் வழங்கப்படுவதை தடுக்க போலீஸ் காவல் மனுவை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. எங்கும் தப்பி ஓடமாட்டார். நீதிமன்றம் கூறிய உணவு கூட வழங்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதிதான். அன்பில் மகேஸ் தூங்கும்போது விளக்கை எரிய விட்டுள்ளனர். மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாபுக்கு கூட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. மாநில நலனுக்காக அன்பில் மகேஸும் அவரது குடும்பமும் ரத்தத்தையும், வியர்வையும் அளித்துள்ளனர். மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும். வீட்டு உணவு மற்றும் மருந்து வழங்க வேண்டும் என்பது அடிப்படை கோரிக்கை. போலீஸ் காவல் அளிப்பதாக இருந்தால் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும். நாங்கள் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்’ எனக் கூறி வாதங்கள் நிறைவு செய்யப்பட்டன. காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உஷா ராணி ஆஜராகி, ‘அன்பில் மகேஸுக்கு சிறையில் உரிய மருத்துவ வசதி செய்து தரப்படும். வீட்டு உணவு மட்டும் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டியுள்ளதால், வீட்டு உணவுக் கோரிய மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும்’ எனத் தெரிவித்தார். அதற்கு மகேஸ் தரப்பில், ‘இதற்குக் கூட அவகாசம் வேண்டுமா? இவர்களது நோக்கத்தைப் பாருங்கள். வீட்டு உணவு வழங்கக்கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்’ என நீதிபதியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அன்பில் மகேஸ் தரப்பு வழக்கறிஞர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் வெளியே பேச நீதிபதி அனுமதி அளித்தார். அதன்பின்னர், நீதிமன்றத்தில், அன்பில் மகேஸ் தரப்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜராகி வீட்டு உணவு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி வாதங்களை முன்வைத்தார். பின்னர் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, “எதற்கு காவலில் எடுத்து விசாரிக்க கேட்கிறீர்கள்?” என விசாரணை அதிகாரி செந்திலிடம் விளக்கம் கேட்டார். சாட்சி கூண்டில் நின்றிருந்த காவல் அதிகாரி செந்தில், “கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி இளங்கோ என்பவர் காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவை விசாரணைக்கு எடுத்து, இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது” என்று தொடங்கி, வழக்கின் விவரங்கள் குறித்து விளக்கமாக தெரிவித்தார். மேலும், “சரணடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் தலைமறைவாக இருந்த காலத்தில் நடந்த விவரங்களை பெற வேண்டும். வழக்கில் தொடர்புடைய பணம் எங்கு சென்றது தொடர்பாக விசாரிக்க வேண்டும். மகேஸ், குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்கள், பினாமிகள் பற்றி விசாரிக்க வேண்டும். உறவினர்கள் சொத்து தொடர்பான ஆவணங்களை குறித்து விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் 5 நாட்கள் காவல் அனுமதி வழங்க வேண்டும்” எனக் கூறி, நீதிமன்றம் விதிக்க கூடிய நிபந்தனை அனைத்தும் பின்பற்றப்படும் என உத்தரவாதம் அளித்தார். இதன்பின்னர் உத்தரவிட்ட நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு மீதான உத்தரவை திங்கட்கிழமைக்கு (நவம்பர் 2) தள்ளிவைத்தார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை