அன்பில் மகேஸுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அன்பில் மகேஸுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!

அன்பில் மகேஸுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது பற்றி... நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர் - DNS ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நவ. 2 வரை போலீஸ் காவலில் விசாரிக்க ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ. 100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை கடந்த அக். 26 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இதனிடையே, அன்பில் மகேஸை 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணைக்காக, புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அன்பில் மகேஸ் இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது, ”நீதிமன்ற உத்தரவை மீறி முதல் வகுப்பில் சரியான உணவு வழங்கவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்பட்டது. அதனை மகேஸால் சாப்பிட முடியவில்லை. உடல் எடை குறைந்துவிட்டது. அவருக்கு சிறையில் வீட்டு உணவு வழங்க கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இதனிடையே, வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அன்பில் மகேஸை 5 நாள்கள் காவலில் விசாரிக்க காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்பில் மகேஸை நவ. 2 வரை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி அனுமதி வழங்கினார். மேலும், ”விசாரணை காலத்தில் அன்பில் மகேஸை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவிம் துன்புறுத்தக் கூடாது. உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். காவலில் உள்ள காலத்தில் நாள்தோறும் அவரது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்” என்று காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை