அந்தமான் கடல்பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து... அந்தமான் கடலில் நிலநடுக்கம்... - கோப்புப் படம் அந்தமான் கடல்பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவின் தெற்கு அந்தமான் மாவட்டத்தில் இருந்து வடமேற்கு திசையில் 218 கி.மீ. தொலைவில் கடல்பகுதியில், வியாழக்கிழமை (அக். 29) மாலை 3.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, தேசிய நிலநடுக்கம் கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால், 10 கி.மீ. ஆழத்தில் மட்டுமே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்தமான் கடலில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗