அரசன் சிறப்பு விடியோ குறித்து... அரசன் மேக்கிங் விடியோ நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்படத்தின் சிறப்பு புரமோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் ஒரே நேரத்தில் அரசன் மற்றும் ராஜன் வகையறா ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இரண்டும் வடசென்னை திரைப்பட உலகுடன் தொடர்புடைய கதை என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அரசன் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், பணிகள் முடிவடையாததால் அடுத்தாண்டுக்குச் செல்கிறது. இதனால், தீபாவளியன்று அரசன் திரைப்படத்தின் சிறப்பு புரோமோவும் வெளியாகவுள்ளது.இந்த புரோமோவில் பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் நடித்துள்ளார். இந்த நிலையில், இந்த புதிய விடியோ 7 நிமிட அளவில் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிமுக விடியோவே பெரிய அளவில் வைரலானது. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த புதிய விடியோ குறித்த தகவலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசன் 7 நிமிட சிறப்பு விடியோ?
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗