சீன் படத்தின் டிரைலர் வெளியானது குறித்து... சூர்யா நடித்துள்ள சீன் படத்தின் டிரைலர் இன்று (அக். 31) வெளியானது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் சீன். மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தை சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக நஸ்ரியா, வில்லனாக நஸ்லென் நடித்துள்ள இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான இரு பாடல்கள் மற்றும் கிளிம்ஸ் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. சூர்யா நடிப்பில் இந்தாண்டு வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின், டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று இரவு 7.30 மணிக்கு வெளியானது. சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சீன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், டிரைலரின் ஒரு காட்சியில் அரசியல் குறித்து சூர்யா பேசியுள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளத்திலும் அதிக திரைகளில் இப்படம் வெளியாகின்றது. கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களைத் தொடர்ந்து இந்தாண்டில் சூர்யாவின் மூன்றாவது படமாக 'சீன்' வெளியாகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியலில் நுழைகிறாரா சூர்யா? 'சீன்' டிரைலர் வெளியானது!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗