அரசு ஊழியர்கள் வேட்டி - சட்டை அணிந்துவர ஆலோசனை! கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அரசு ஊழியர்கள் வேட்டி - சட்டை அணிந்துவர ஆலோசனை! கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!

அமைச்சரின் அந்த ஆலோசனையை கைவிட வேண்டுமென சிபிஎம் வலியுறுத்தல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் - கோப்புப் படம் அரசு ஊழியர்கள் வாரம் ஒரு நாள் வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என்ற ஆலோசனையை கைவிட வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நாள் சிறப்பு விழா சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, ”வாரத்தில் ஒரு நாள் பட்டு வேட்டி, சட்டையை முதல்வர் அணிந்து வருகிறார். அதேபோல தமிழகம் முழுவதும் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரம் ஒரு நாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வேட்டி, சட்டை அணிந்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். வேட்டி, சட்டை அணிவது தமிழர்களின் மரபைப் போற்றுவதுடன் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இனி வாரத்தில் ஒருநாள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘மரபு ஆடை தினம்’ கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதேபோன்று, தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்படும்” என்றார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ”தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் மரபு உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டுமென அரசாணை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. மாநிலத்திற்குள்ளேயே மரபு உடை என்பது வேறுபட்டதாகவும் இருக்கிறது. தங்களுடைய மரபு உடையை ஒவ்வொருவரும் அணிந்து வருவது என்பது தேவையற்ற விவாதங்களை எழுப்பும், கேள்விக்குள்ளாக்கப்படும். இத்தகைய ஆடை குறித்த வழிகாட்டுதல்கள் நிகழ்கால சமூகச் சூழலில் தவறான முறையில் விரிவாக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அமைச்சரின் அந்த ஆலோசனையை கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை