அரசு பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் உத்தரவு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
அரசு பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை: அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், ‘போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் இருப்பதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த வயது வரம்பு உயர்வானது இடஒதுக்கீட்டுப் பிரிவினுக்கு (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்டி, ஆதரவற்ற கணவரை இழந்தவர்கள்) ஏற்கெனவே உள்ள வயது சலுகைகளுடன் கூடுதலாக அமையும். குரூப்-1, குரூப்-2, 2 ஏ, குரூப்-4 உள்பட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இந்த வயது வரம்பு உயர்வு பொருந்தும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு பணிகளுக்கு தேவைப்படும் அலுவலர்களும், ஊழியர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக தேர்வு செய்ய்படுகிறார்கள். இதற்காக டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், கோட்ட தீயணைப்பு அலுவலர், தொழிலாளர் உதவி ஆணையர் ஆகிய பதவிகளுக்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல், நகராட்சி ஆணையர் (கிரேடு-2,), சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், பல்வேறு துறைகளில் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-2, 2 ஏ தேர்வும், இளநிலை உதவியாளர, தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப்-4 தேர்வும் நடத்தப்படுகின்றன. தொழில்நுட்பம் சார்ந்த பதவிகளுக்கு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் பொதுப் பிரிவினருக்கும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் குறிப்பிட்ட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப்-1 தேர்வுக்கு வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37 ஆகவும் உள்ளது. அதேபோல், குரூப்-2, 2 ஏ தேர்வுக்கு வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30 ஆக உள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. அவர்களுக்கு சில பதவிகளுக்கு மட்டும் வயது வரம்பு இருக்கிறது. குரூப்-4 தேர்வுக்கும், தொழில்நுட்ப தேர்வுகளுக்கும் வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளை பொறுத்தமட்டில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அரசு பணிகளுக்கு ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகள் நடத்தப்படாததால் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இதர மாநிலங்களில் இருப்பதை போன்று குரூப்-1 தேர்வுக்கு வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும் என்று தேர்வர்கள், குறிப்பாக ஏற்கெனவே குரூப்-4 அல்லது குரூப்-2 தேர்வெழுதி அரசு பணியில் இருப்பவர்கள் கடந்த 10 ஆண்டு காலமாக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல், பொதுப் பிரிவினரும் தங்களுக்கான வயது வரம்பை உயர்த்தக் கோரி தொடர்ந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில், தேர்வர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு பணிக்கா வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை