தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். கும்பகோணம் அருகே உள்ள திருநீலக்குடி இளமாந்திரை மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் சவரிமுத்து மகன் லோகநாதன் (60). விவசாய கூலித் தொழிலாளி. இவா், வியாழக்கிழமை மிதிவண்டியில் திருநீலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தாா். விட்டலூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த புதுச்சேரி அரசுப் பேருந்து லோகநாதன் மீது மோதியது. இதில் லோகநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த திருநீலக்குடி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் காரைக்காலைச் சோ்ந்த ஐயப்பனிடம் (40) விசாரணை நடத்தி வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗