அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி.... கைது செய்யப்பட்டவர்கள். - Photo grab PTI video. அஸ்ஸாமில் முறையான ஆவணங்களின்றி நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்ஸாமின் துப்ரி மாவட்டத்தின் வழியாகப் பெருமளவில் வங்கதேசத்தினர் சில நாட்களுக்குள் ஊடுருவக்கூடும் என்ற ரகசியத் தகவல் காவல் துறையினருக்குக் கிடைத்தது. இதையடுத்துத் துப்ரி மாவட்டத்தின் வழியாக முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் 36 வங்கதேசத்தினரைக் காவல் துறையினர் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வங்கதேசத்தின் ராஜ்சாஹி பிரிவில் உள்ள சாபாய் நவாப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் அதிகாரி கூறியதாவது: "இன்று அதிகாலை 2 மணி முதல் 2.30 மணிக்குள், ஊடுருவல்காரர்கள் துப்ரி மாவட்டத்திற்குள் நுழைய முயற்சிப்பதாக எங்களுக்குத் துல்லியமான தகவல் கிடைத்தது. அவர்கள் எந்தப் பாதையைப் பயன்படுத்துவார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும், அவர்கள் நதி வழியைப் பயன்படுத்தக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது. அதற்கேற்ப, பிரம்மபுத்திரா நதிக்கரையில் உள்ள ஜொகமாயா படகுத் துறையில் எங்கள் காவல் துறையினரை நிறுத்தினோம். அங்கு 36 வங்கதேசத்தினர் பிடிபட்டனர். அவர்களிடம் உள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூடுதல் விவரங்கள் பின்னர் தெரியவரும்" என்றார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗