அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வரும்பட்சத்தில், அனுமதி ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்திருப்பது பற்றி... ஆம்னி பேருந்துகள் - கோப்புப் படம் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வரும்பட்சத்தில், அனுமதி ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பது, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, முதன்மை செயலாளர் / போக்குவரத்து ஆணையர், சிஜி தாமஸ் வைத்யன், போக்குவரத்து துறை அரசு செயலாளர், இல.நிர்மல்ராஜ், மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், முனைவர் வீ.ப. ஜெயசீலன் ஆகியோர் தலைமையில் மாநில போக்குவரத்து ஆணையரகத்தில் 29.10.2026 அன்று கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும், போக்குவரத்து நெரிசலை தவிர்த்து பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ளவும் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள திருவசந்தம் உணவகத்திற்கு முன்னர் நிறுத்தக்கூடாது எனவும், இணையவழி தளத்தில் இடம்பெற்றுள்ள திருவசந்தம் உணவகம் என்ற இடத்தினை நீக்கம் செய்யும்படியும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் சென்று ஆம்னி பேருந்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறுத்துமிடத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு திருவசந்தம் உணவகம் முன்பு ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகள் வழக்கத்திற்கு மாறாக அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு, அனுமதிச்சான்று மீது தற்காலிக தடை / அனுமதி இரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டது. அதனை கண்காணிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதுமுள்ள 12 சரகங்களில் சிறப்புப் பறக்கும் படை (Enforcement Team) குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய மாவட்ட வருவாய் அலுவலர், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பொது மேலாளர், இணையதள ஆம்னி பேருந்து பதிவு நிறுவனங்கள் (Abhi Bus, Red Bus. Zing Bus, Flix Bus, Paytm) மற்றும் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இனிவரும் நாட்களில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வரும்பட்சத்தில், அனுமதி இரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். புகார் தெரிவிக்க வேண்டிய கைப்பேசி எண்: 1800 425 6151 புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை