அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது குறித்து... உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம் அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தவெக ஆட்சியமைப்பதற்கான நம்பிக்கைத் தீர்மானத்தில் அதிமுக கொறடாவின் உத்தரவையும் மீறி, தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். கொறடாவின் உத்தரவை மீறியதாக, இந்த 25 எம்எல்ஏ-க்களின் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேரவைத் தலைவரிடம் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த 25 பேரில் 4 பேர், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டனர். மீதமுள்ள 21 பேரும் மன்னிப்புக் கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை மனுவை எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றார். இதனையடுத்து, 21 பேர் மீதான தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்படுவதாக பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இருப்பினும், தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பி.வி. செல்வகுமார் பொதுநல மனு தாக்கல் செய்தார். இருப்பினும், பி.வி. செல்வகுமாரின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் ரவி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணையில், இந்த விவகாரம் ஏற்கெனவே முடிந்து விட்டதாகவும், இதில் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: வழக்கு முடித்துவைப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗