“அடுத்தகட்ட வளர்ச்சி...” - ஐடிபிஐ தனியார்மய விவகாரத்தில் ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
“அடுத்தகட்ட வளர்ச்சி...” - ஐடிபிஐ தனியார்மய விவகாரத்தில் ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு விதமாகவும், சாதாரண குடிமக்களுக்கு வேறு விதமாகவும் வங்கிகள் செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இப்போது சாதாரண மக்கள் எளிதாகக் கடன் பெற முடிவதாக தெரிவித்துள்ளார். ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாட்டின் தொழில் துறையைக் கட்டமைப்பதற்காக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஐடிபிஐ வங்கி உருவாக்கப்பட்டது. மோடி ஆட்சிக் காலத்திலோ முதலில் ஏல நடைமுறை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னரே விலை நிர்ணயிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் உருவாக்கப்பட்டன. மோடி ஆட்சிக் காலத்திலோ அவை விற்கப்படுகின்றன. ஐடிபிஐ வங்கி தனியார்மயமாக்கப்படுவதை எதிர்க்கும் அதன் ஊழியர்களுக்கு நான் துணை நிற்கிறேன்’ என தெரிவித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்தப் பதிவுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் காங்கிரஸ் கட்சி எவ்வாறு தனது சொந்த சொத்துகளைப் போல பயன்படுத்தியது என்பதையும், முறையாக கடன் வழங்கும் விதிமுறைகளைப் புறக்கணித்து, தங்களுக்கு வேண்டியவர்களுக்குக் கடன் வழங்குமாறு வங்கி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது ஐடிபிஐ வங்கி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வீடியோகான், வின்சம், ஏபிஜி ஷிப்யார்டு, கிங்பிஷர் போன்ற பெரிய வணிகக் குழுக்களுக்கு கடன் வழங்க ஐடிபிஐ வங்கி கட்டாயப்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம். இந்தக் கடன்கள் அனைத்தும் வாராக்கடன்களாக மாறி ஐடிபிஐ வங்கிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தின. இந்த உண்மையை நாங்கள் கண்டறிந்தோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசு, தொழில்முறை அணுகுமுறை, விவேகமான செயல்பாடுகள், ரூ.25,000 கோடிக்கும் அதிகமான முதலதனத்தை மீண்டும் உள்ளீடு செய்தது போன்ற நடவடிக்கைகள் காரணமாக ஐடிபிஐ வங்கி மீட்டெடுக்கப்பட்டு தற்போது அது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்லத் தயாராக உள்ளது. ஐடிபிஐ வங்கியின் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன. இது குறித்து நாங்கள் நேற்று தெளிவுபடுத்தி உள்ளோம். பிப்ரவரி 2024-ல் வெளியிடப்பட்ட இந்திய பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில், வெளிப்படையான மோசடிகள் மற்றும் பொருளாதார நிர்வாகச் சீர்கேடுகள் குறித்த பல உதாரணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கை இன்றும் பொருத்தமானதாகவே உள்ளது. ரஃபேல் விவகாரத்தில் நீங்கள் கூறிய பொய்கள் தோல்வியடைந்து அம்பலப்பட்டன. அதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. இப்போதும் அதேதான் நடக்கப் போகிறது. காங்கிரஸ் ஆட்சிக் கால வங்கி முறையில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு தொலைபேசி வழி அணுகுமுறை இருந்தது. சாதாரண குடிமக்களுக்கு விதிமுறைகள் கடுமையாக இருந்தன. செல்வாக்கைப் பயன்படுத்தி கடன் பெறும் காலம் முடிந்துவிட்டது. இப்போது சாதாரண மக்கள் எளிதாகக் கடன் பெற முடிகிறது. கடன் வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் தொலைபேசி அழைப்புகள் இப்போது இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை