அவுட்சோர்சிங் பணியாளர்கள் நியமனம் விரிவாக்கம்: சமூகநீதியை காப்பதற்கு பதில் அரசே காவு கொடுக்கக்கூடாது! - அன்புமணி கண்டனம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அவுட்சோர்சிங் பணியாளர்கள் நியமனம் விரிவாக்கம்: சமூகநீதியை காப்பதற்கு பதில் அரசே காவு கொடுக்கக்கூடாது! - அன்புமணி கண்டனம்

இனி குத்தகை முறை பணி நியமனங்கள் மேற்கொள்ளப் படாது என்பதை கொள்கை முடிவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பது குறித்து.. பாமக தலைவா் அன்புமணி கண்டனம் - டிஎன்எஸ் தமிழ்நாட்டில் அவுட்சோர்சிங் பணியாளர்கள் நியமனம் விரிவாக்கத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சமூகநீதியை காப்பதற்கு பதில் அரசே காவு கொடுக்கக்கூடாது என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு குத்தகை (அவுட்சோர்சிங்) முறையில் பணியாளர்களை வழங்குவதற்கான நிறுவனமாக வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனை (Overseas Manpower Corporation Limited) நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அரசுத்துறைகளில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கும் நடைமுறைக்கு முடிவுகட்டுவதற்கான அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசின் நிதித்துறை வெளியிட்டிருக்கும் அரசிதழில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதே போன்ற பிற துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்களை குத்தகை முறையில் வழங்குவதற்கான நிறுவனமாக தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவளக் கார்ப்பரேஷனை நியமித்து ஆளுனர் ஆணையிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைநிலைப் பணியாளர்கள், நகல் எந்திரத்தை இயக்குபவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், ஓட்டுனர், உதவியாளர், அலுவலக கண்காணிப்பாளர், அலுவலக மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்படும் வழக்கம் கைவிடப்பட்டு, அந்தப் பணிகளுக்கு மிகக்குறைந்த ஊதியத்தில் குத்தகைப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதற்கு இது வழி வகுக்கும். உழைப்புச் சுரண்டல் எடுத்துக்காட்டாக இளநிலை உதவியாளர் பணிக்கு டி.என்.பி.எஸ்,சி மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.19,500 என்ற அடிப்படை ஊதியத்துடன் அனைத்து படிகளும் சேர்த்து மாத ஊதியமாக ரூ.36,000 வரை ஊதியம் வழங்கப்படும். ஆனால், குத்தகை முறையில் அவர்களுக்கு ரூ.20,000 மட்டுமே மொத்த ஊதியமாக வழங்கப்படும். அதேபோல், அலுவலக கண்காணிப்பாளர் பணிக்கு ரூ.70,000-க்கு பதிலாக ரூ.30,000, பிரிவு அலுவலர் நிலையிலான அலுவலக மேலாளர் பணிக்கு ரூ.84,000-க்கு பதிலாக ரூ.40,000 மட்டுமே குத்தகை முறையில் ஊதியம் வழங்கப்படும். இது ஏற்க முடியாத அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் ஆகும். இதைவிட பெரிய அநீதி என்னவென்றால், இந்த வகை நியமனங்களில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது என்பது தான். வழக்கமாக அரசுத்துறைகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் போது, போட்டித் தேர்வுகள் அல்லது நேர்காணல் நடத்தப்பட்டு, இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வாறு செய்வதன் வாயிலாகத் தான் பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டும், அடக்கப்பட்டும் கிடந்த சமூகங்கள் வேலைவாய்ப்பு பெற்று முன்னேற முடியும். ஆனால், வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் மூலம் ஊழியர்கள் குத்தகை முறையில் தேர்வு செய்யப்படும் போது இடஒதுக்கீடு பின்பற்றப்படாது. அதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மேலும், மேலும் பின்னுக்குத் தள்ளப்படவும், ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் ஒடுக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்த முறை தொடர்ந்தால் இட ஒதுக்கீட்டுக்கு முடிவுரை எழுதப்பட்டு, சமூகநீதி காவு கொடுக்கப்பட்டுவிடும். ரத்து செய்ய வேண்டும் அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை பணி நியமனங்கள் 2010 ஆம் ஆண்டுகளின் இறுதியில் அதிமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த திமுக ஆட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் குத்தகை முறையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் நியமிக்கப்பட்டார்கள். இந்த நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசிதழில், சென்னை, கோவை, உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள அரசுத் துறைகளிலும், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிலும் கடைநிலை ஊழியர்கள் முதல் மேலாளர்கள் வரையிலான பணிகளுக்குத் தேவையானவர்களை குத்தகை முறையில் வழங்கும் உரிமை தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போதே அந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், குத்தகை முறை பணி நியமனங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். திமுக அரசுக்கு தவெக அரசு சற்றும் சளைத்ததில்லை மாற்றங்களை வழங்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக, சமூகநீதிக்கு எதிரான, மனித உழைப்பைச் சுரண்டும் குத்தகை முறை நியமனங்களை கைவிடும் என்று நம்பினேன். ஆனால், திமுக ஆட்சியில் 20 மாவட்டங்களில் மட்டும் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனால் மேற்கொள்ளப்பட்டு வந்த குத்தகை முறை நியமனங்களை ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் தவெக அரசு நீட்டித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. உழைப்புச் சுரண்டல், சமூக அநீதி, இட ஒதுக்கீடு ஒழிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் திமுக அரசுக்கு தவெக அரசு சற்றும் சளைத்ததில்லை என்பதையே இத்தகைய நடவடிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெக தேர்தல் அறிக்கையில் கண்ணியமான வாழ்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு & அரசு ஊழியர்கள் என்ற தலைப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் அனைத்து தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதை செய்யாத தவெக அரசு, நிரந்தரப் பணியாளர்களுக்கு பதிலாக குத்தகை பணியாளர்களை நியமிக்கத் துடிக்கிறது. இதுவா சமூகநீதி? சமூக அநீதியான நடவடிக்கை தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரை கொள்கை வழிகாட்டிகளாகக் கொண்டிருக்கும் தவெக, இப்படிப்பட்ட சமூக அநீதியான நடவடிக்கைககளை மேற்கொள்வது நியாயமா? அரசுப் பணியாளர்கள் நியமனம் என்பது வேலைவாய்ப்பு வழங்குவதற்கானது மட்டுமல்ல. காலம் காலமாக சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த மக்களுக்கு சமூகநீதி, அதிகாரம், முன்னேற்றம் ஆகியவற்றை வழங்குவதற்கான கருவி ஆகும். குத்தகை முறை பணி நியமனங்களை விரிவாக்குவதன் மூலம் இந்த நோக்கங்களைச் சிதைத்து விடக் கூடாது. எனவே, தமிழ்நாட்டில் இனி குத்தகை முறை பணி நியமனங்கள் மேற்கொள்ளப் படாது என்பதை கொள்கை முடிவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அத்துடன், அரசுத்துறை காலி பணியிடங்களை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பவும், 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை