பெத்தியைக் குறிப்பிட்டு பேசிய ஜான்வி விடியோ வைரல்... நடிகை ஜான்வி கபூர் பெத்தி திரைப்படத்தைக் குறிப்பிட்டு பேசிய விடியோ வைரலாகியுள்ளது. நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் பெற்று வருகிறார். தெலுங்கில், தேவரா படத்தில் நடித்திருந்தார். தற்போது, தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதுடன் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இவர் நடிகர் ராம் சரணுடன் இணைந்து நடித்த பெத்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக, ஜான்வி கபூரை இயக்குநர் புஜ்ஜி பாபு சனா மிகக் கவர்ச்சியாக படம் முழுக்கப் பயன்படுத்தியதாக விமர்சனங்களும் எழுந்தன. மேலும், இப்படி நடிப்பதற்கு ஜான்வி கபூர் தானே ஒப்புக்கொண்டார் என அவரையும் தாக்கினர். இந்த நிலையில், காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜான்வியிடம், “50 ஷேட்ஸ் ஆஃப் கிரே (50 shades of grey) திரைப்படத்தின் ஹிந்தி வடிவத்தில் நடித்தால் யாருடன் இணைந்து நடிப்பீர்கள்?” எனக் கேட்கப்பட்டது. இதற்கு ஜான்வி, ”இல்லை. பெத்தி திரைப்படத்தால் நான் மட்டும் இந்தப் படத்தில் நான் நடிக்க மாட்டேன்” எனக் கூறினார். 50 ஷேட்ஸ் ஆஃப் கிரே நெருங்கமான காட்சிகள் கொண்ட திரைப்படம் என்பதால் பெத்தியால் சந்தித்த விமர்சனங்களுக்கு இப்படி பதிலளித்துள்ளார். ஜான்வியின் இந்த விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அய்யய்யோ, ஆளைவிடுங்க! பெத்தியைக் குறிப்பிட்டு பேசிய ஜான்வி கபூர்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗