சென்னை மேயர் பிரியாவை விஜய் அரசு புறக்கணிக்கிறதா? திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டின் பின்னணி

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
சென்னை மேயர் பிரியாவை விஜய் அரசு புறக்கணிக்கிறதா? திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டின் பின்னணி

பட மூலாதாரம், X/Priya Rajan DMK சென்னை மாநகராட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகள், ஆலோசனைக் கூட்டங்கள் குறித்து தனக்கும் கவுன்சிலர்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்று மேயர் பிரியா குற்றம் சாட்டியுள்ள நிலையில், தவெக அரசு திட்டமிட்டு மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணிப்பதாக திமுக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் தவெக அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பாக மேயர் பிரியா பேசியிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் தவெக செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார், சென்னை மாநகராட்சிப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அண்மையில் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடத்திய ஆய்வுக் கூட்டத்திற்குத் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதே மேயர் பிரியாவின் முக்கியக் குற்றச்சாட்டு. சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், ஆய்வுக் கூட்டங்கள் குறித்து தனக்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்றார். பட மூலாதாரம், X/Priya Rajan DMK "முதலமைச்சர் எப்போது வருகிறார் என்ற நேரத்தைச் சொன்னால் என்னால் வர முடியும். ஆனால், அந்தத் தகவலே எனக்குத் தெரிவிக்கப்படுவதில்லை" என்று அவர் தெரிவித்தார். அதிகாரிகள் கூட்டம் நடத்துவது குறித்த தகவல்கள்கூட தனக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், கவுன்சிலர்களுக்கும் இதே நிலைதான் இருப்பதாகவும் அவர் கூறினார். அதிகாரிகளுக்கு அரசுத் தரப்பில் ஏதேனும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாத நிலையில், இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களே பதவிக்காலம் இருக்கும், அவர்கள் எதற்காகத் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும்? மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு மரியாதை இல்லாதபோது, எதற்காகப் பதவியில் இருக்க வேண்டும்? மாமன்றத்தைக் கலைத்துவிடுமாறு அரசிடம் சொல்லிவிடுங்கள்" எனப் பேசினார். End of அதிகம் படிக்கப்பட்டது தனது பகுதியில் அடிப்படைப் பணிகளான சாலைப் பராமரிப்பு, மழைநீர் தேங்கும் இடங்களில் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளைக்கூட மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார். பட மூலாதாரம், GCC தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு மேயர் பிரியா அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது இது முதல் முறையல்ல. முந்தைய திமுக ஆட்சியின்போது சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்காக சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்ட ஒப்பந்தங்களைத் தவெக அரசு ரத்து செய்ததற்கு அவர் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதனால் மாநகராட்சிப் பணிகள் முடங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். சென்னை மாநகராட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் விளக்கேற்றும் நிகழ்வில் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, தனக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற எழுப்பிய புகாரும் விவாதப் பொளாருளானது. விளக்கேற்றுவதற்கான மெழுகுவர்த்தி தனக்கு வழங்கப்படவில்லை என்று பல்லவி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய பிரியா நிகழ்ச்சி தொடங்கிய பிறகுதான் அவர் வந்ததாகவும், அதனால் இந்தப் புகார் எழுந்ததாகவும் தெரிவித்திருந்தார். தவெக அரசு திட்டமிட்டே திமுக கவுன்சிலர்களுக்கும் மேயர், துணை மேயருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிப்பதாக சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் கூறுகிறார். "சென்னை மாநகராட்சியில் நடைபெறும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், வேண்டுமென்றே எங்களைத் தவிர்க்கிறார்கள். முதலமைச்சர் ரிப்பன் மாளிகைக்கு வருவது குறித்துக்கூட எங்களுக்குத் தகவல் தெரிவிப்பதில்லை. அதே நேரத்தில், நாங்கள் முதலமைச்சரைப் புறக்கணிப்பதாகப் பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள்" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறும்போது அவரை வரவேற்பதும், கூட்டங்களில் பங்கேற்பதும் தங்களது வழக்கமான நடைமுறை என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம், X/MMageshkumar பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு தவெக அரசுடன் ஒத்துழைக்கத் தாங்கள் தயாராக இருப்பதாகக் கூறிய மகேஷ்குமார், அதற்கு அண்மையில் நடைபெற்ற பருவமழை முன்னெச்சரிக்கைக் கூட்டத்தையே உதாரணமாகக் குறிப்பிட்டார். சென்னையைச் சேர்ந்த அமைச்சர்களுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நடத்திய அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் அழைக்கப்பட்டதாகவும், அதில் பங்கேற்று மழைநீர் தேங்கும் பகுதிகள், தாழ்வான இடங்கள் குறித்த விவரங்களையும், முந்தைய திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துரைத்ததாகவும் அவர் கூறினார். "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாங்கள். மழைநீர் தேங்கினால் மக்களிடம் பதில் சொல்ல வேண்டியவர்கள் நாங்கள்தான். எனவே, அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம்" என்றார். சென்னை மாநகராட்சி மண்டலம் 10க்கு உட்பட்ட சைதாப்பேட்டையில் அண்மையில் அம்மா பூங்கா திறக்கப்பட்டபோதும் உள்ளூர் கவுன்சிலருக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் புகார் கூறினார். மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவை மேயர், துணை மேயர் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர் திறந்து வைப்பதுதான் வழக்கமான நடைமுறை என்றும், ஆனால் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அந்தப் பூங்காவைத் திறந்து வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். "முந்தைய அதிமுக, திமுக ஆட்சிகளின்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களாக இருந்தாலும்கூட மாநகராட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தற்போதைய அரசின் கீழ் அந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை" என்றும் அவர் கூறினார். சென்னை மாநகராட்சியின் 7வது மண்டலத்தின் தலைவரும் திமுக கவுன்சிலருமான மூர்த்தியும் மாநகராட்சி அதிகாரிகள் தங்களுக்குத் தகவல் தெரிவிப்பதில்லை என்று குற்றம்சாட்டுகிறார். "தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் எந்த நிகழ்ச்சி குறித்தும் எங்களுக்குத் தகவல் தெரிவிப்பதில்லை. மழைக்கால ஆய்வுகள், பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடர்பாகக்கூட எங்களுக்குத் தெரிவிப்பதில்லை. ஆனால், களத்தில் மக்களுடன் இணைந்து பணியாற்றுபவர்கள் நாங்கள்தான்," என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அம்பத்தூரில் மாநில அரசு தொடர்பான கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடைபெறும்போதுகூட அந்தப் பகுதியின் கவுன்சிலராகவும் மண்டலக் குழுத் தலைவராகவும் இருக்கும் தனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார். மண்டலம் 4-ன் தலைவரும் திமுக கவுன்சிலருமான நேதாஜி, மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்று குற்றம்சாட்டுகிறார். தனது பகுதியில் உள்ள பூங்காக்களில் சேதமடைந்த ஊஞ்சல்களைப் பழுதுபார்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பணிகளுக்குப் போதிய நிதி இல்லை என்று அதிகாரிகள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் பெரம்பூரில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், X/JDillibabuINC ஆனால், திமுக கவுன்சிலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கிறார் காங்கிரஸ் கவுன்சிலர் தில்லிபாபு. மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து தனக்கு முறையாக அழைப்புகள் வருவதாகவும், பருவமழை தொடர்பான பணிகள் குறித்த தகவல்களும் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார். "அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து களத்தில் பணியாற்றி வருகிறேன். எனக்கு ஒருங்கிணைப்பில் எந்தப் பிரச்னையும் இல்லை. மழைநீர் எங்கும் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய பணிகளுக்கு அனுமதி வழங்குவதில் கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஏற்கெனவே தொடங்கப்பட்ட பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதில் பிரச்னை இல்லை," என்று அவர் தெரிவித்தார். திமுக கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதில் தனக்குப் பிரச்னை இல்லை என்று அவர் கூறியிருப்பது இந்த விவகாரத்தில் மாறுபட்ட அனுபவங்கள் இருப்பதைக் காட்டுகிறது. திமுக கவுன்சிலர்களின் புகார்களை மறுக்கும் தவெக செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார், சென்னை மாநகராட்சிப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகக் கூறுகிறார். "மாநகராட்சிப் பணிகள் எதுவும் முடங்கவில்லை. பருவமழை தொடர்பான பணிகளே அதற்குச் சிறந்த உதாரணம். நடைபெற்று வரும் பணிகளைக் கண்காணிக்க அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக கவுன்சிலர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படுகிறது. பலர் கூட்டங்களில் பங்கேற்றும் உள்ளனர்." என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். சில திமுக கவுன்சிலர்கள் கூட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் பணிகளைத் தனியாக ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. சமீரனிடம் பிபிசி தமிழ் கருத்துக் கேட்டபோது, அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரிடமிருந்து பதில் கிடைத்தவுடன் அது இந்தக் கட்டுரையில் இணைக்கப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை