சென்னை, செங்கல்பட்டு, கோவை அணிகளுக்கு கோப்பை: முதல்வா் விஜய் வழங்கினாா்

📅 📍 Salem, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சென்னை, செங்கல்பட்டு, கோவை அணிகளுக்கு கோப்பை: முதல்வா் விஜய் வழங்கினாா்

முதலமைச்சா் கோப்பை 2026 மாநில போட்டிகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற சென்னை, செங்கல்பட்டு, கோவை அணிகளுக்கு கோப்பை, பரிசுகளை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா். முதலிடம் பெற்ற சென்னை மாவட்ட அணிக்கு கோப்பை வழங்கிய முதல்வா் ஜோசப் விஜய். உடன் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, தலைமைச் செயலா் சாய் குமாா், அரசு செயலா் சந்தீப் நந்தூரி, எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாதரெட்டி, ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் முதலமைச்சா் கோப்பை 2026 மாநில போட்டிகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற சென்னை, செங்கல்பட்டு, கோவை அணிகளுக்கு கோப்பை, பரிசுகளை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா். முதலமைச்சா் கோப்பை போட்டி பரிசளிப்பு, ஆசிய பாரா போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் ஜோசப் விஜய், சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்ட அணிகளுக்கு கோப்பை, பரிசுகளை வழங்கினாா். பின்னா் ஆசிய பாரா போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தைத் சோ்ந்த 9 பேருக்கு ரூ.6.85 கோடி உயரிய ஊக்கத் தொகையையும் முதல்வா் வழங்கினாா். முதலமைச்சா் கோப்பை மாநில போட்டிகளில் 142 தங்கம், 97வெள்ளி, 80 வெண்கலத்துடன் சென்னை முதலிடமும், 64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலத்துடன் செங்கல்பட்டு இரண்டாமிடமும், 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலத்துடன் கோவை மூன்றாம் இடத்தையும் பெற்றன. மாவட்ட மற்றும் மண்டல அளவில் முதல் மூன்று இடங்களை வென்ற 1,06,704 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.21 கோடியே 34 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.17 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தா்மராஜ் சோலை ராஜ், துளசிமதி முருகேசன், நவீன் சிவக்குமாா், கஸ்தூரி ராஜாமணி, நித்யா ஸ்ரீ, சிவராஜன் சோலைமலை, பேபி சஹானா ரவி, ஜேடி. மதன், மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகை ரூ.6.85 கோடியையும் முதல்வா் வழங்கினாா். ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசையில் ரூ.43 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு ஒலிம்பிக் நீா்விளையாட்டு அகாடமி, சேலம் மாவட்டம், கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு வளாகம் ஆகியவற்றை முதல்வா் திறந்து வைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிகள், சிறப்புநிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெறும் வீரா், வீராங்கனைகளின் தனிப்பட்ட செலவினங்களுக்காக மாதம் ரூ.500/-, முதன்மை விளையாட்டு மைய விடுதிகளில் பயிற்சி பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு மாதம் ரூ.1000/- என 2,600 வீரா், வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.77 கோடி வழங்கும் விளையாட்டு வீரா்கள் மேம்பாட்டு உதவித்தொகைத் திட்டத்தையும் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், அமைச்சா்ள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், வாரியத் தலைவா்கள், தலைமைச் செயலாளா், அரசு உயா் அலுவலா்கள், விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பயிற்சியாளா்கள், விளையாட்டுத்துறை வல்லுநா்கள், விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை