சென்னையில் எங்கெல்லாம் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு? ஆதவ் அர்ஜுனா விளக்கம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சென்னையில் எங்கெல்லாம் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு? ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சென்னையில் பாதுகாப்பற்ற இடங்களில் இருந்து மக்கள் வெளியேற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தியது குறித்து... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம் சென்னையில் மழை நேரங்களில் மிகவும் மோசமான பாதுகாப்பற்ற இடங்களில் இருந்து அரசு கொடுக்கும் இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "சென்னையில் வருகிற நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரையில் மழையின் அளவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தொகுதிகளிலும் இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாக மழையின் அளவு அதிகரிக்கும்போது அம்பத்தூர், கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் வரையில் வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கும். ஒட்டுமொத்த வட சென்னைக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 40 - 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட குடியிருப்பு வாரியம் மற்றும் குடிசை மாற்று வசதி வீடுகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. இவர்களையெல்லாம் மழை நேரங்களில் வேறிடத்துக்கு அழைத்துச் செல்ல ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், 40 - 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகளை இடித்து புதிதாகக் கட்டப்பட வேண்டும். அப்பகுதிகளில் வசிப்போர் வேறிடத்துக்குச் செல்ல மறுக்கின்றனர். அவர்கள் கொஞ்ச காலம் வேறிடத்துக்குச் செல்வதுடன், அரசுக்கு அவகாசம் அளித்தால் மட்டுமே அதே இடத்தில் புதிய வீடுகள் கட்ட முடியும். இதற்கான உத்தரவாதமும் கொடுக்கிறோம். கடந்த 10 - 15 ஆண்டுகளாக குடிசை மாற்று வாரிய வீடுகளையும் குடியிருப்பு வாரிய வீடுகளையும் முன்னாள் அமைச்சர்கள் யாரும் ஆய்வு செய்யவில்லை. சென்னையில் பல இடங்களில் வாழவே முடியாத சூழ்நிலையில் வீடுகள் இருக்கின்றன. இங்கிருப்பவர்களெல்லாம் வேறிடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சி அலுவலரிடமும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம். ஒரே இடத்தில் இருக்கும் உணர்வை விடுத்து, பாதுகாப்பு இல்லாத இடத்தைவிட்டு, அரசு கொடுக்கும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும். 2 ஆண்டுகள் பொறுத்துக் கொண்டால் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்" என்று தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை