முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தியது பற்றி... முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை - TNDIPR சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64-ஆவது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி இன்று காலை மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், ராஜ்மோகன், விஜய் தமிழன் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்துக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனிடையே, உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் பயணம் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசுத் தரப்பில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அமைச்சர்கள் நிர்மல் குமார், ராஜீவ், மதன்ராஜா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗