சென்னையில் திடீர் கனமழையால் மக்கள் மகிழ்ச்சி... சென்னையில் கனமழை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாள்களாக பகல் பொழுதில் நல்ல வெய்யிலும், இரவுப்பொழுதில் மழையும் பெய்து வருகின்றது. அதன்படி, சென்னையில் இன்று காலை முதல் திடீரென வெய்யிலும், சட்டென்று வானிலை மாறி மேகமூட்டத்துடன் மழை பெய்வதுமாக இருந்தது. தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், துணிகள் வாங்குவது, ஊருக்குச் செல்வதற்கு ஆயத்தமாவது என்று மக்கள் தங்களை பிஸியாக வைத்திருக்கும் இந்த வேளையில் சென்னையில் பெரிய அளவில் வெய்யில் இல்லாமல், இதமான வானிலை நிலவி வருகின்றது. இந்த நிலையில், பிற்பகல் 12.30 மணிக்கு மேல் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் அம்பத்தூர், அண்ணாநகர், ஆவடி, கோயம்பேடு, போரூர், கொளத்தூர், பட்டரவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. அதோடு தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகின்றது. வடகிழக்குப் பருவமழை தொடங்கி, வங்கக்கடலில் உருவான ஓர்னாப், முரசு ஆகிய இரண்டு புயல்களும் ஆந்திரம் நோக்கிச் சென்ற நிலையில், அடுத்த புயலாவது சென்னை நோக்கி வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
📢 விளம்பரம் • Advertisement
விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗