முதல்வர் விஜய் - அஜித் குமார் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது பற்றி... நடிகர் அஜித் குமாருடன் முதல்வர் விஜய் - கோப்புப் படம் அரசியலில் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நடிகர் அஜித்குமாரை முதல்வர் விஜய் சந்தித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைப்போல ஒரு திட்டமாவது இந்த 6 மாதகால (தவெக) ஆட்சியில் கொண்டு வரப்பட்டதா? பிரேக் இல்லாத வண்டியைப்போல திட்டமிடல் இல்லாமல் இந்த ஆட்சி போய்க் கொண்டிருக்கிறது. சமீபத்தில் முதல்வர் வெளிநாடு சென்றார். அவர் எதற்காக சென்றார் என்பதே உங்களுக்கே தெரியும். வெளிநாடுகளில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பார் என நினைத்தேன். ஆனால், செய்தித்தாள்களில் வேறு புகைப்படம் இருந்தது. அந்தப் புகைப்படத்தில் தொழிலதிபர்கள் யாரும் இல்லை. எந்தப் புகைப்படம் என்பதும் உங்களுக்கே தெரியும். இவரா நாட்டு மக்களுக்கு நன்மை செய்யப் போகிறார்? திரைப்பட நடிகரான ரேஸர் ஒருவர் அரசியலுக்கு வருவார் எனத் தெரிந்தவுடன், தனக்குப் போட்டியாக ரேஸர் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவரைப் பார்க்கச் சென்று விட்டார் முதல்வர். மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கவோ தொழில் முதலீடுகளை ஈர்க்கவோ அவர் வெளிநாடு செல்லவில்லை. தன்னுடைய சொந்த விஷயத்துக்காகவே அவர் வெளிநாடு சென்றதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி - யூடியூப் மதுராந்தகம் தேர்தல் பிரசாரத்தில் 5 நிமிடங்கள் பேசினால் கொத்து பரோட்டா போட்டு விடுவோம் என (முதல்வர்) பேசினார். ஆனால், அவரை 2 நாள்களாக ஓட ஓட விரட்டினோமா இல்லையா? மதுராந்தகத்தில் முதலில் பிரசாரம் செய்தார். இரண்டாவது முறை வீதி வீதியாக வந்தார். அவரின் முகத்தைக் காட்டினாலே வெற்றி கிடைக்கும் என சில அமைச்சர்கள் பேசினர். ஆனால், அவர் முகத்தை மட்டும் காட்டவில்லை. ஆடு மேய்த்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், டீ குடித்தார். அவர்கள் டிபன் பாக்ஸில் பணம் கொடுத்து வைத்ததாக அவர்களின் கூட்டணிக் கட்சியினரே குற்றம் சாட்டினர். பணத்தைக் கொடுத்துத்தான் வெற்றி பெற்றீர்களே தவிர, மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்குகளைப் பெறாத கட்சி - தவெக. மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிட முதல்வர் வந்து சென்ற செலவு மட்டும் ரூ. 5.5 கோடி என்கிறார்கள். ஆனால், பிரிட்டிஷ் காலத்தில் அணை கட்டுவதற்கு ஆன செலவு ரூ. 4.5 கோடி மட்டுமே. இதில் யாருடைய பணம் விரயமாகிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மக்கள் கட்டுகிற வரிப் பணம்தான்" என்று தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
முதல்வர் விஜய் ஏன் அஜித்தை சந்தித்தார்? இபிஎஸ் சொல்லும் குட்டி ஸ்டோரி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗