முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் முதல்வர் விஜய் கலந்து கொள்ளாதது குறித்து வைகோ விளக்கம் அளித்தது பற்றி... தேவர் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தும் விஜய் - கோப்புப் படம் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் முதல்வர் விஜய் கலந்து கொள்ளாதது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64-ஆவது குருபூஜை, வருகிற அக். 30 ஆம் தேதியில் பசும்பொன்னில் நடைபெறுகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு ஆட்சியிலும் இந்த ஆட்சியில் முதல்வர்கள் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். தொடர்ந்து, ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திலும் மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது தவெக ஆட்சியமைத்திருக்கும் நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் முதல்வர் விஜய் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தவெக கூட்டணிக் கட்சியான மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது, "எல்லா காலத்திலும் எல்லா முதல்வர்களும் பசும்பொன் சென்றனரா? முக்குலத்தோர் மட்டுமே சென்று கொண்டிருந்த காலத்தில், அந்தச் சமூகத்தைச் சாராத அரசியல்வாதியாக நான் மட்டுமே சென்றேன். அதன் பின்னர்தான், அந்த சமூக மக்களின் ஆதரவுக்காக 10 - 15 ஆண்டுகளாக மற்ற கட்சியினரும் செல்லத் தொடங்கினர். தற்போது தேவர் குருபூஜையில் கூட்டம் கூடி நெருக்கடி ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே முதல்வர் விஜய் தவிர்த்திருக்கிறார். அந்த இடத்துக்கான உரிய மரியாதையை முதல்வர் விஜய் அளித்திருக்கிறார்" என்று தெரிவித்தார். இருப்பினும், சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அன்றைய நாளில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் விஜய் ஏன் பசும்பொன் செல்லவில்லை? வைகோ விளக்கம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗