முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதற்கு திமுக பெண் கவுன்சிலர் மன்னிப்பு கோரியது குறித்து... திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் - கோப்புப் படம் முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதற்காக திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மன்னிப்பு கோரினார். சென்னையில் கடந்த அக். 7-ல் நடைபெற்ற திமுக மகளிரணி கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் அவதூறாக பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகின. மேலும், முதல்வர் விஜய் குறித்து நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் அநாகரிகமாக பேசும்போது மேடையில் சென்னை மேயர் பிரியா, கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இருந்தபோதிலும் அவர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தவெகவினர் குற்றம் சாட்டினர். முதல்வர் குறித்து அநாகரிகமாக பேசியதாக திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீதும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முரளிதரன் மீதும் பி-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் தவெக நிர்வாகி உதயகுமார் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, கவுன்சிலர் சுதா மற்றும் முரளிதரன் ஆகிய இருவரின் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில், முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மனு தாக்கல் செய்திருக்கிறார். மேலும், முதல்வர் குறித்த அவதூறு பேச்சுக்கு ஏற்கெனவே மன்னிப்பு கோரியதாகவும் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், பொதுவெளியில் அவதூறாகப் பேசியதால், மன்னிப்பும் பொதுவெளியில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சுதா தீனதயாளன் அளித்த மனு மீதான தீர்ப்பையும் நீதிமன்றம் ஒத்திவைத்தது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை