புதுக்கோட்டையில் மதுக் கடைகள் மூடப்படுவது குறித்து... மதுக் கடைகள் மூடல் - பிரதிப் படம் புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் வருகையால் நவம்பர் 2-ல் மதுக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்ப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் 2 ஆம் தேதியில் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்து, அரசு நலத்திட்ட விழாக்களிலும் முதல்வர் விஜய் கலந்து கொள்ளவிருக்கிறார். முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி, மாவட்டத்தில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசியல் பாகுபாடின்றி அனைத்து எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படும் என அமைச்சர் பர்வேஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே, முதல்வரின் வருகையால் அன்றைய நாளில் மாவட்டத்தில் சில மதுக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி, நவ. 2-ல் முதல்வர் வரக்கூடிய சாலையான மாத்தூர், கீரனூர், வெள்ளனூர் காவல் நிலையத்துக்குள்பட்ட 10-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் மூடப்படவுள்ளன. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் விஜய் வருகை! புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗