முதல்வர் விஜய்யை பேராசிரியர் கலையரசன் சந்தித்தது பற்றி... முதல்வர் விஜய், பேராசிரியர் கலையரசன் - x முதல்வர் ஜோசப் விஜய்யை பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசன் வியாழக்கிழமை நேரில் சந்தித்தார். சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரும் சென்னை வளர்ச்சி மையத்தின் பேராசிரியரான கலையரசனை புதன்கிழமை அதிகாலை காவல்துறையினர் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாவரம் தவெக எம்.எல்.ஏ. காமாட்சி குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதற்காக கைது செய்யப்படுவதாக காவல்துறையினர் விளக்கம் அளித்த நிலையில், அந்த கணக்கு தன்னுடையது இல்லை என்று கலையரசன் விளக்கம் அளித்தார். இதன்பின்னர், நேற்று காலை 8 மணியளவில் கலையரசனை அவரது வீட்டில் காவல்துறையினர் இறக்கிவிட்டனர். இதுதொடர்பாக டிஜிபிக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ள கலையரசன், தனக்கு தொடர்பில்லாத வழக்கில் அதிகாலையில் சீருடையில் இல்லாத காவலர்கள் தன்னை கைது செய்து துன்புறுத்தியதாகவும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தெரிவித்திருந்தார். பேராசிரியர் கலையரசனின் கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் தொல். திருமாவளவன், சிபிஎம் செயலர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தன. இதுதொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல் குமார், பேராசிரியர் கலையரசனின் கைது நடவடிக்கை முழுக்க முழுக்க காவல்துறையின் தவறு என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்துக்கு பேராசிரியர் கலையரசனை நேரில் வரவழைத்து முதல்வர் ஜோசப் விஜய் இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனும் உடனிருந்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் விஜய்யுடன் பேராசிரியர் கலையரசன் சந்திப்பு!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗