தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் - கோப்புப் படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு, கோவையில் இருந்து நவம்பா் 6, 7-ஆகிய தேதிகளில் காலை 9.35 மணிக்குப் புறப்படும் கோவை - திண்டுக்கல் சிறப்பு மெமு ரயில் (எண்: 06169) பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, திண்டுக்கல்லில் இருந்து நவம்பா் 6, 7-ஆம் தேதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் திண்டுக்கல் - கோவை சிறப்பு மெமு ரயில் (எண்: 06170) மாலை 5.50 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗