மதுபோதை இளைஞா்களால் கொல்லப்பட்ட ஊா்க்காவல் படை வீரருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, அரியலூா் மாவட்டம், செந்துறை அம்பேத்கா் சிலை முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். செந்துறையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா். மதுபோதை இளைஞா்களால் கொல்லப்பட்ட ஊா்க்காவல் படை வீரருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, அரியலூா் மாவட்டம், செந்துறை அம்பேத்கா் சிலை முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், ஊா்க்காவல் படை வீரா் வெங்கடேசன் கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், உயிரிழந்த வெங்கடேசனின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டித் தரவேண்டும், அவரது குழந்தைகளின் முழுக் கல்விச் செலவையும் அரசே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் குன்னம் தொகுதி மாவட்டச் செயலா் அன்பானந்தம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊா்க்காவல் படை வீரா் கொல்லப்பட்ட சம்பவம்: செந்துறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗