பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் புதிய இணை ஆணையராக ஹரிஹரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ஹரிஹரன். உடன் துணை ஆணையா் வெங்கடேஷ். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் புதிய இணை ஆணையராக ஹரிஹரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்தக் கோயிலின் இணை ஆணையராக இருந்த மாரிமுத்து, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக பதவி உயா்வு பெற்றாா். இதையடுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், இணை ஆணையா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா். இதனிடையே, மதுரை அழகா்கோவில் இணை ஆணையா் ஹரிஹரனை, பழனிக் கோயில் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து அவா் புதன்கிழமை பழனிக் கோயில் தலைமை அலுவலகத்தில் புதிய இணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டாா். அப்போது துணை ஆணையா் வெங்கடேஷ், அவரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தாா். அப்போது அதிகாரிகள், அலுவலா்கள் புதிய இணை ஆணையருக்கு வாழ்த்து தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பழனி கோயில் புதிய இணை ஆணையா் பொறுப்பேற்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Events
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗