கோவை மத்திய சிறையில் இருந்து விசாரணைக் கைதி தப்பியோட்டம்

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
கோவை மத்திய சிறையில் இருந்து விசாரணைக் கைதி தப்பியோட்டம்

கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து விசாரணைக் கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பாக, ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனைக் கைதிகள், உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள், குண்டர் தடுப்புக் கைதிகள் என 1,600-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த ராகவன்(25) என்ற கைதி மீது கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளன. தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூன் மாதம் ராகவன் கோவை மத்திய சிறையில் இருந்து கர்நாடக போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணை முடிந்து கோவை திரும்பும் வழியில் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து ராகவன் தப்பி ஓடினார். இதனையடுத்து கர்நாடக மாநில போலீஸார் அளித்த புகாரின் அடிப்படையில் அன்னூர் போலீஸார் ராகவனை தேடி வந்தனர். இந்நிலையில் பவானி சாகர் பகுதியில் ராகவன் தலைமறைவாக இருப்பது அன்னூர் போலீஸாருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அன்னூர் போலீஸார் ராகவனை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க நேற்று நள்ளிரவு அழைத்து வந்தனர். தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு கைதி ராகவனை, அன்னூர் போலீஸார் கோவை மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். சிறை வளாகத்தில் நுழைந்தவுடன், உள்ளே கைதிகளை விசாரிக்கும் அறை அருகே, விசாரணைக் கைதி ராகவன் கையில் இருந்த கை விலங்கை போலீஸார் கழட்டினர். அதன் பின்னர், கைதி ராகவன் போலீஸாரை போக்கு காட்டி ஏமாற்றிவிட்டு, சிறை வளாகத்தில் இருந்து வெளியே ஓடி தப்பிச் சென்றார். அங்கிருந்த போலீஸார் மற்றும் சிறைக் காவலர்கள் அவரை பிடிக்கமுயன்றும் முடியவில்லை. அதற்குள் அவர் தப்பிச் சென்றார். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி, சிறைக் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர். முன்னரே தப்பியோடி கைதி பிடிபட்டு மீண்டும் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை